பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வெடிமருந்து மற்றும் தளவாடங்களை ஏற்றிச் செல்லும் 6-வது ஏவுகணை படகு, எல்எஸ்ஏஎம் 20 (யார்டு 130) பணியில் ஈடுபடுத்தப்பட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 29 APR 2024 9:18PM by PIB Chennai

இந்திய கடற்படைக்காக தானேயில் உள்ள  சூர்யதீப்தா ப்ராஜெக்ட்ஸ் தனியார் நிறுவனத்தால், கட்டப்பட்ட 11 x ஏசிடிசிஎம் பார்ஜ் திட்டத்தின் 6-வது படகு இன்று பணியில் ஈடுபடுத்தப்பட்டது. தொடக்க விழாவுக்கு ஐ.என்.ஏ.எஸ்., பொது மேலாளர் திரு மதுசூதன் புய் தலைமை தாங்கினார்.

11 x ஏசிடிசிஎம் படகு கட்டுவதற்கான ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தானேவில் உள்ள சூர்யதீப்தா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் இடையே 2021 மார்ச் 5-ம் தேதி கையெழுத்தானது. இந்தப் படகுகள், இந்திய துறைமுகங்கள் மற்றும் வெளி துறைமுகங்களில் உள்ள கப்பல்களுக்கு தளவாடங்களைக் கொண்டு செல்லுதல், இறக்குதல் ஆகியவற்றை எளிதாக்குவதன் மூலம் இந்திய விமானப் படையின் செயல்பாட்டு கடமைகளுக்கு உத்வேகம் அளிக்கும்.

இந்தப் படகுகள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, தொடர்புடைய கடற்படை விதிகள் மற்றும் இந்திய கப்பல் பதிவேட்டின் ஒழுங்குமுறைகளின் கீழ் கட்டப்பட்டவை. வடிவமைப்புக் கட்டத்தின் போது படகின் மாதிரி சோதனை விசாகப்பட்டினத்தின் கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் படகுகள் இந்திய அரசின் மேக் இன் இந்தியா முன்முயற்சியின் பெருமைக்குரிய கொடியை ஏந்திச் செல்கின்றன.

---

(Release ID: 2019109)

PKV/KPG/RR


(வெளியீட்டு அடையாள எண்: 2019128) வருகையாளர் எண்ணிக்கை : 125
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी