குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

திருப்பதியில் உள்ள தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் 3-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள்

Posted On: 27 APR 2024 9:40PM by PIB Chennai

அனைவருக்கும் இனிய மதிய வணக்கம்,

திருப்பதிக்கு வந்திருப்பதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு வந்துள்ளேன். திருப்பதியில் அனைவரும் தெய்வீக உணர்வை அனுபவிக்க முடியும்.  கோவிலில் தரிசனம் செய்த போது அதை நானும் அனுபவித்தேன்

சமஸ்கிருதம் நமது ஆன்மீக முயற்சிக்கு ஒரு புனித பாலமாக செயல்படும் தெய்வீக மொழியாகும்.  நமது ஆன்மிகத் தேடலில், தெய்வீகத்தை இணைக்கும் புனிதப் பாலமாக அது செயல்படுகிறது.
சமஸ்கிருதம் மனித நாகரிகத்திற்கான கலாச்சார நங்கூரம்.

இன்றைய காலகட்டத்தில், சமஸ்கிருதம் அறிவார்ந்த தத்துவங்கள், ஆன்மீக அமைதி, தனக்கும் உலகிற்கும் ஆழமான இணைப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒரு தனித்துவமான தன்மையை வழங்கும் மொழியாக உள்ளது. 

 இந்திய அறிவு முறைகளின் மறுமலர்ச்சியில் தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களின் பங்கு முக்கியமானது. சமஸ்கிருதத்தின் வளமான பாரம்பரியத்திற்கும் நவீன கல்வித் தேவைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் வகையில், புதுமையான பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும். பலதுறை ஆராய்ச்சியையும் மேம்படுத்த வேண்டும்.  சமஸ்கிருதம் என்னும் புனித மொழி நம்மை தெய்வீகத்துடன் இணைப்பது மட்டுமல்லாமல், உலகைப் பற்றிய முழுமையான புரிதலை நோக்கிய பாதையை ஒளிரச் செய்வதாக அமைந்துள்ளது. விலைமதிப்பற்ற பழங்கால கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாப்பதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். 

நமது கலாச்சார பாரம்பரியத்தின் கருவூலமாக சமஸ்கிருதம் திகழ்கிறது. அதைப் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் தேசிய முன்னுரிமை மற்றும் கடமை ஆகும். சமஸ்கிருதம் இன்றைய தேவைக்கேற்ப வளர்க்கப்பட வேண்டும். அதை எளிமையாக்க வேண்டும். நம் அன்றாட வாழ்க்கையில் சமஸ்கிருத பயன்பாட்டை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.

மத மற்றும் தத்துவ நூல்கள் மட்டுமல்லாமல், மருத்துவம், நாடகம், இசை மற்றும் அறிவியல் குறித்த மதச்சார்பற்ற படைப்புகளையும் உள்ளடக்கியதாக சமஸ்கிருதம் உள்ளது. எனினும் கல்வியில் சமஸ்கிருதத்தின் ஒருங்கிணைப்பு குறைவாகவே உள்ளது. இது பெரும்பாலும் இந்திய அறிவு முறைகளை நிராகரிக்கும் நீடித்த காலனித்துவ மனநிலையால் ஏற்பட்டதாகும்.

சமஸ்கிருதத்தைப் படிப்பது வெறுமனே ஒரு கல்வித் தேடல் அல்ல. அது சுய கண்டுபிடிப்பு மற்றும் அறிவொளியின் பயணம். சமஸ்கிருதத்தின் பாரம்பரியத்தை எடுத்துச் செல்ல வேண்டும். விலைமதிப்பற்ற பாரம்பரியத்தின் தூதர்களாக மாணவர்கள் மாற வேண்டும் சமஸ்கிருதத்தின் பொக்கிஷங்கள் எதிர்கால சந்ததியினரை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துகள்!

நன்றி. ஜெய்ஹிந்த்!

*************


ANU/AD/PLM/KV
 



(Release ID: 2019034) Visitor Counter : 39


Read this release in: English , Urdu , Hindi , Odia , Telugu