நிலக்கரி அமைச்சகம்
2024-25 நிதியாண்டிற்கு நாடு முழுவதும் உள்ள மத்திய பொதுத்துறை, மாநில அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி சுரங்கங்களின் இணைந்த வருடாந்தர தர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
24 APR 2024 6:11PM by PIB Chennai
நிலக்கரி அமைச்சகத்தின் துணை அலுவலகமான நிலக்கரி கட்டுப்பாட்டு அமைப்பு, நிலக்கரி மாதிரியை எடுப்பதற்கான நடைமுறை மற்றும் தரத்தை வகுக்கிறது. நிலக்கரி சுரங்கங்களின் சரியான தரம், நிலக்கரியின் தரம் ஆகியவற்றை உறுதிப்படுத்த நிலக்கரி சுரங்கங்களை ஆய்வு செய்கிறது. நிலக்கரி கட்டுப்பாட்டு விதிகள் 2004-ன் (2021-ல் திருத்தப்பட்டது) கீழ் நிலக்கரி சுரங்கத்தில் வெட்டப்பட்ட நிலக்கரியின் தரத்தை அறிவிப்பதற்கும் பராமரிப்பதற்கும் உத்தரவுகளை வெளியிடுகிறது. மத்திய பொதுத்துறை, மாநில அரசு மற்றும் தனியார் துறைகளின் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி சுரங்கங்களின் தர விவரங்கள் கிடைப்பது முடிவெடுக்கும் செயல்முறைகளுக்கு மிக முக்கியமானதாகும்.
மத்திய பொதுத்துறை நிறுவனத்தின் 427 சுரங்கங்களில் வருடாந்தர மாதிரி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தரத்தின் சரியான தன்மையை உறுதிப்படுத்த, வரையப்பட்ட மாதிரிகள் இரண்டு வெவ்வேறு ஆய்வகங்களில் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
சுரங்க விளிம்புகளை ஆண்டுதோறும் தரம் பிரிக்கும் பணி வரையறுக்கப்பட்ட நடைமுறைகளின்படி முடிவடைந்துள்ளது. பொதுத்துறை, மாநில அரசு மற்றும் தனியார் சுரங்கங்களில் உள்ள அனைத்து நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி சுரங்கங்களின் அறிவிக்கப்பட்ட தர இணைப்புகள் 01.04.2024 முதல் பொருந்துவதாகும்.
***
(Release ID: 2018750)
SMB/AG/RR
(रिलीज़ आईडी: 2018805)
आगंतुक पटल : 123