பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு அடித்தள ஆளுகை குறித்த தேசிய கருத்தரங்கை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் திரு சைலேஷ் குமார் சிங் ஆகியோர் புதுதில்லியில் தொடங்கி வைத்தனர்
Posted On:
24 APR 2024 6:50PM by PIB Chennai
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு, "73-வது அரசியல் சட்டத் திருத்தத்தின் 30 ஆண்டுகளுக்குப் பின் அடித்தள ஆளுகை" என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் திரு சைலேஷ் குமார் சிங் ஆகியோர் புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தனர்.
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ் தனது உரையில், குடிமக்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்கை அடைவதற்கான அடித்தள டிஜிட்டல் ஆளுமையை வெளிப்படுத்துவதற்கான இந்தியாவின் தனித்துவ வாய்ப்பை வலியுறுத்தினார். கிராமப்புற மாற்றத்திற்கான இயந்திரங்களாக பஞ்சாயத்துகளை அவர் உருவகப்படுத்தினார். பஞ்சாயத்துகளின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளதையும் ஊரகக் குடிமக்களுக்கு அதிகாரமளித்தலையும் மேற்கோள் காட்டி, கிராமப்புற இந்தியாவை மாற்றியமைப்பதில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 லட்சத்திற்கும் அதிகமான பிரதிநிதிகளின் பங்களிப்பை அவர் பாராட்டினார். பஞ்சாயத்து ராஜ் அமைப்பு வலுப்படுத்தப்படுவதை மீண்டும் உறுதிசெய்ய வேண்டிய நேரம் இது என்று அவர் குறிப்பிட்டார். பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் அதிக எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள் கிராமப்புற இந்தியா முழுவதும் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ளனர், "என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த 30 ஆண்டுகளில் கிடைத்த அனுபவங்களைப் பயன்படுத்தி, வலுவான, திறமையான, தற்சார்பு கொண்ட பஞ்சாயத்துகளை உருவாக்குவதில் அமைச்சகம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை திரு விவேக் பரத்வாஜ் அடிக்கோடிட்டுக் காட்டினார். பஞ்சாயத்து அளவில் போதுமான மற்றும் திறமையான மனிதவளத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், சொந்த வருவாய் ஆதாரத்தை அதிகரிப்பதற்கான அணுகுமுறையையும் வலியுறுத்தினார்.
ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் திரு சைலேஷ் குமார் சிங், உள்ளாட்சி அமைப்புகளில் சுயாட்சியை வலுப்படுத்த பஞ்சாயத்து அளவில் வளர்ச்சித் தலையீடுகள் மற்றும் டிஜிட்டல் முன்முயற்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதை எடுத்துரைத்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 300 பிரதிநிதிகள் பங்கேற்ற அடித்தள ஆளுகை குறித்த தேசிய கருத்தரங்கில், திறன் மேம்பாடு மூலம் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை வலுப்படுத்துதல், அவற்றுக்கு டிஜிட்டல் அதிகாரமளித்தல் மூலம் அடித்தள நிர்வாகத்தை வலுப்படுத்துதல், செயல்பாடுமிக்க பஞ்சாயத்து உள்கட்டமைப்பை உறுதி செய்தல், போதுமான மனித வளங்களை எளிதாக்குதல் உள்ளிட்ட அமைச்சகத்தின் முன்னுரிமைகள் எடுத்துரைக்கப்பட்டன.
***
(Release ID: 2018761)
SMB/AG/RR
(Release ID: 2018802)
Visitor Counter : 71