பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கஜகஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை செயலாளர் தலைமையிலான இந்தியத் தூதுக்குழு பங்கேற்கிறது

प्रविष्टि तिथि: 24 APR 2024 7:23PM by PIB Chennai

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்கும் வருடாந்தர கூட்டத்திற்காக 2024 ஏப்ரல் 25 முதல் 26 வரை கஜகஸ்தானின் அஸ்தானாவுக்கு செல்லும் இந்தியத் தூதுக்குழுவிற்குப் பாதுகாப்புத் துறை செயலாளர் ஸ்ரீ கிரிதர் அரமானே தலைமை தாங்குவார். இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகள் உட்பட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்குள் பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்.

அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் பாதுகாப்புத் துறை செயலாளர், இந்தியாவின் அறிக்கையை வழங்குவார். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நட்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுடனும் அவர் பேச்சு வார்த்தை நடத்துவார்.

***

AD/SMB/RS/DL


(रिलीज़ आईडी: 2018778) आगंतुक पटल : 98
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी