குடியரசுத் தலைவர் செயலகம்
ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவ கல்வி நிறுவனத்தின் நான்காவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்
Posted On:
23 APR 2024 7:25PM by PIB Chennai
உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் இன்று (ஏப்ரல் 23, 2024) நடைபெற்ற எய்ம்ஸ் மருத்துவ கல்வி நிறுவனத்தின் 4-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய குடியரசுத் தலைவர், மருத்துவத் துறையில் உலகத் தரம் வாய்ந்த கல்வி மற்றும் சேவையை வழங்குவது ரிஷிகேஷ் எய்ம்ஸ் உட்பட அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகளின் மிகப்பெரிய தேசிய சாதனை என்று கூறினார். சிறந்த, குறைந்த கட்டணத்தில் சிகிச்சையை வழங்குவதற்காக அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எய்ம்ஸ் மருத்துவ கல்வி நிறுவனத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயனடைய வேண்டும் என்பதையும், அதிக தகுதி வாய்ந்த மாணவர்கள் கல்வி பெற வேண்டும் என்பதையும் நோக்கமாகக் கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல எய்ம்ஸ் மருத்துவமனைகள் நிறுவப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.
ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்வி நிறுவனத்தில்
பயில்பவர்களில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் மாணவிகள் என்று குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், கொள்கைகள் வகுப்பது முதல் சுகாதாரம் வரையிலான துறைகளில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருவது மிகப்பெரிய மற்றும் நேர்மறையான சமூக மாற்றத்தை குறிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
சமூகத்தின் நலனுக்காக சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதே ரிஷிகேஷ் எய்ம்ஸ் போன்ற கல்வி நிறுவனங்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2018637
***
SRI/IR/AG/RR
(Release ID: 2018713)
Visitor Counter : 78