பாதுகாப்பு அமைச்சகம்
ராணுவ வீரர்களுக்கு உயிரி மருத்துவ ஆய்வை மேற்கொள்ள ராணுவ மருத்துவ சேவைகள் மற்றும் ஐசிஎம்ஆர் இணைகின்றன
Posted On:
23 APR 2024 6:36PM by PIB Chennai
ராணுவ மருத்துவ சேவைகள் 2024, ஏப்ரல் 23 அன்று மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய கெளன்சிலுடன் இணைந்து ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய சுகாதார ஆராய்ச்சி மற்றும் சேவைகள் துறையின் செயலாளரும், ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநருமான டாக்டர் ராஜீவ் பாகல், ராணுவ மருத்துவ சேவைகள் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் தல்ஜித் சிங், ஆகியோர் கையெழுத்திட்டனர். உயிரி மருத்துவ ஆய்வு மற்றும் கல்வியில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். பல்வேறு நிலப்பரப்புகளில் பணியாற்றும் ராணுவ வீரர்களின் குறிப்பிட்ட சுகாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இது உதவும்.
ராணுவ வீரர்கள் மிக உயர்ந்த மலைப்பகுதிகளிலும் போர் தொடர்பான விபத்துகள், விபத்துக்கு பிந்தைய இழப்புகளிலும், தொற்றும் நோய்களிலும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ஆ்யவு செய்ய, ராணுவ மருத்துவ சேவைகள் அமைப்பும் மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய கெளன்சிலும் கரம்கோர்த்துள்ளன.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் பல்வேறு கூட்டான கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது. ஐசிஎம்ஆர்- ஏசிஎஸ்ஐஆர் பிஹெச்டி திட்டத்தின் கீழ், ராணுவ அதிகாரிகள் ஆய்வுப்பட்டத்திற்கு பதிவு செய்யும் வாய்ப்பையும் இந்த ஒப்பந்தம் கொண்டுள்ளது.
***
AD/SMB/RS/DL
(Release ID: 2018649)
Visitor Counter : 62