மத்திய பணியாளர் தேர்வாணையம்

ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு (II), 2023-ன் இறுதி முடிவை மத்திய குடிமைப் பணி தேர்வாணையம் அறிவித்துள்ளது

Posted On: 22 APR 2024 6:39PM by PIB Chennai

மத்திய குடிமைப் பணி தேர்வாணையம் 2023, செப்டம்பர் மாதத்தில் நடத்திய ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு (II), 2023 மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட மத்தியப் பணியாளர் தேர்வு வாரியத்தின் நேர்முக தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தகுதி வாய்ந்த 197 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமி, கேரளாவின் எழிமலாவில் உள்ள இந்திய கடற்படை அகாடமி, ஹைதராபாதில் உள்ள விமானப்படை   பயிற்சி மையம் ஆகியவற்றில் சேருவதற்கு இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் பல்வேறு படிப்புகளில் சேருவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களின் விவரங்கள் 3 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளன. அரசு அறிவித்துள்ளபடி இந்திய ராணுவ அகாடமிக்கு 100 காலியிடங்கள் [என்.சி.சி 'சி' சான்றிதழ் (இராணுவ பிரிவு) வைத்திருப்பவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 13 காலியிடங்கள் உட்பட], இந்திய கடற்படை அகாடமி, எழிமலா, கேரளா நிர்வாக கிளை (பொது சேவை) / ஹைட்ரோ [என்.சி.சி 'சி' சான்றிதழ் (கடற்படை பிரிவு மூலம் என்.சி.சி சிறப்பு நுழைவு மூலம்) வைத்திருப்பவர்களுக்கு 06 காலியிடங்கள் உட்பட] மற்றும் விமானப்படை அகாடமிக்கு 32, ஹைதராபாத் [03 காலியிடங்கள் என்.சி.சி 'சி' சான்றிதழ் (ஏர் விங்) வைத்திருப்பவர்களுக்கு என்.சி.சி சிறப்பு நுழைவு மூலம் ஒதுக்கப்பட்டுள்ளன].

இது குறித்த விவரங்களை தேர்வாணைய அலுவலக உதவி மையத்தின் 011-23385271/011-23381125/011-23098543 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணலாம் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2018494

----

ANU/SRI/IR/KPG/DL



(Release ID: 2018517) Visitor Counter : 33