பாதுகாப்பு அமைச்சகம்

முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌகான் பிரான்ஸ் பயணம்

Posted On: 21 APR 2024 7:33PM by PIB Chennai

முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌகான், அரசு முறைப் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் கணிசமான வேகம் பெற்றுள்ள இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதை இந்தப் பயணம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தனது பயணத்தின் போது, ஜெனரல் அனில் சௌகான் பிரான்சின் மூத்த சிவில் மற்றும் ராணுவத் தலைவர்களுடன் உரையாட உள்ளார். பிரான்ஸ் நாட்டு முப்படைகளின் தலைமைத் தளபதி (சி.இ.எம்.ஏ) ஜெனரல் தியரி புர்கார்ட், உயர் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான தேசிய நிறுவனத்தின் இயக்குநர் உள்ளிட்டோருடனான சந்திப்பு இதில் அடங்கும்.

பிரெஞ்சு விண்வெளித் தளம், தரைப்படை தளம், எகோல் மிலிடேரில் (ராணுவப் பள்ளி) ராணுவ மற்றும் கூட்டுப் பணியாளர்கள் பிரிவு மாணவ அதிகாரிகளிடையே  ஜெனரல் அனில் சௌகான்  உரையாற்றுவார். பிரான்சில் உள்ள சஃப்ரான் குழுமம், நேவல் குரூப், டசால்ட் ஏவியேஷன் உள்ளிட்ட சில புகழ்பெற்ற பாதுகாப்புத் தொழில் நிறுவனங்களைப் பார்வையிட்டு, அவற்றின் நிர்வாகிகளுடன் அவர் கலந்துரையாட உள்ளார்.

 

நியூவ்-சேப்பல் நினைவிடம், வில்லியர்ஸ்-கிஸ்லைனில் உள்ள இந்திய நினைவகம் ஆகியவற்றைப் பார்வையிடும் முப்படைகளின் தலைமைத் தளபதி, முதல் உலகப் போரின்போது உயிர்த்தியாகம் செய்த இந்திய வீரர்களை கௌரவிக்கும் வகையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்.

***

SMB/BR/KPG



(Release ID: 2018434) Visitor Counter : 96