நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2023-24-ம் நிதியாண்டில் சாதனை அளவாக 125 முன்கூட்டிய விலை ஒப்பந்தங்களில் மத்திய நேரடி வரிகள் வாரியம் கையெழுத்திட்டுள்ளது

प्रविष्टि तिथि: 16 APR 2024 8:04PM by PIB Chennai

மத்திய நேரடி வரிகள் வாரியம்   2023-24-ம் நிதியாண்டில் இந்திய வரி செலுத்துவோருடன் 125 முன்கூட்டிய விலை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இதில் 86 ஒருதரப்பு முன்கூட்டிய விலை ஒப்பந்தங்கள், 39 இருதரப்பு ஒப்பந்தங்கள் ஆகியவை அடங்கும். முன்கூட்டிய விலை ஒப்பந்தங்கள் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து எந்தவொரு நிதியாண்டிலும் இல்லாத வகையில் 2023-24-ம் நிதியாண்டில் அதிக எண்ணிக்கையிலான முன்கூட்டிய விலை ஒப்பந்தங்கள்  மேற்கொள்ளப்பட்டன. இது முந்தைய நிதியாண்டை விட 95 கூடுதல் ஒப்பந்தங்களுடன் 31% அதிகரிப்பைக் குறிக்கிறது. மேலும், முன்கூட்டிய விலை ஒப்பந்தங்கள்  திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 506 ஒருதரப்பு முன்கூட்டிய விலை ஒப்பந்தங்கள், 135 இருதரப்பு முன்கூட்டிய விலை ஒப்பந்தங்கள்  என மொத்த  ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 641 ஆக உயர்ந்துள்ளது.

 ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், ஜப்பான், சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா நாடுகளுடன் பரஸ்பர ஒப்பந்தங்கள் செய்து கொண்டதன் காரணமாக இந்த இருதரப்பு முன்கூட்டிய விலை ஒப்பந்தங்கள்  கையெழுத்திடப்பட்டன.

***

(Release ID: 2018085)

SMB/IR/AG/RR


(रिलीज़ आईडी: 2018115) आगंतुक पटल : 143
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi