வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

உலகளாவிய சவால்கள் தொடர்ச்சியாக இருந்தபோதும், ஒட்டுமொத்த ஏற்றுமதி (வணிகம் + சேவைகள்) கடந்த ஆண்டின் மிக உயர்ந்த சாதனையை விஞ்சும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022-23 நிதியாண்டில் 776.40 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடும்போது 2023-24 நிதியாண்டில் 776.68 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Posted On: 15 APR 2024 3:08PM by PIB Chennai

2024 மார்ச் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி (வணிகம் மற்றும் சேவைகள் இணைந்து) 70.21 பில்லியன்  அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2023 மார்ச் மாதத்தை விட (-) 3.01 சதவீத எதிர்மறை வளர்ச்சியைக் காட்டுகிறது. 2024 மார்ச்  மாதத்தில் ஒட்டுமொத்த இறக்குமதி 73.12 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2023 மார்ச்  மாதத்தை விட (-) 6.11 சதவீத எதிர்மறை வளர்ச்சியைக் காட்டுகிறது.

2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி (வணிகம் மற்றும் சேவைகள் இணைந்து) 776.68 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2022-23 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) 0.04 சதவீத நேர்மறையான வளர்ச்சியைக் காட்டுகிறது. 2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) ஒட்டுமொத்த இறக்குமதி 854.80 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இது நிதியாண்டு 2022-23 (ஏப்ரல்-மார்ச்) ஐ விட (-) 4.81 சதவீத எதிர்மறை வளர்ச்சியைக் காட்டுகிறது.

2023 மார்ச் மாதத்தில் 41.96 பில்லியன் அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது, 2024 மார்ச் மாதத்தில் வணிகப் பொருட்கள் ஏற்றுமதி 41.68 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

2023 மார்ச் மாதத்தில் 60.92 பில்லியன் அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் 2024 மார்ச் மாதத்தில் வணிகப் பொருட்கள் இறக்குமதி 57.28 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) வணிகப் பொருட்கள் ஏற்றுமதி 437.06 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, இது 2022-23 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) 451.07 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) வணிகப் பொருட்கள் இறக்குமதி 677.24 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, இது 2022-23 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) 715.97 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) வணிக வர்த்தகப் பற்றாக்குறை 240.17 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022-23 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) 264.90 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

2024 மார்ச் மாதத்தில் பெட்ரோலியம் அல்லாத மற்றும் நவரத்தினங்கள் அல்லாத ஏற்றுமதி 33.67 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, இது 2023 மார்ச் மாதத்தில் 30.87 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

பெட்ரோலியம் அல்லாத, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் (தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த உலோகங்கள்) இறக்குமதி 2024 மார்ச்  மாதத்தில்  35.21 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, இது 2023 மார்ச் மாதத்தில் 36.51 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) பெட்ரோலியம் அல்லாத மற்றும் நவரத்தினங்கள் அல்லாத ஏற்றுமதி 320.21 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, இது 2022-23 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) 315.64 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

பெட்ரோலியம் அல்லாத, நவரத்தினங்கள் அல்லாத நகைகள் (தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த உலோகங்கள்) இறக்குமதி 2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) 422.80 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, இது 2022-23 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) 435.54 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

சேவைகள் மற்றும் வர்த்தகம்

2023 மார்ச் மாதத்தில் 30.44 பில்லியன் அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது, 2024 மார்ச் மாதத்திற்கான சேவைகள் ஏற்றுமதியின்  மதிப்பு 28.54 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.

2023 மார்ச் மாதத்தில் 16.96 பில்லியன் அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது 2024 மார்ச் மாதத்துக்கான சேவைகள் இறக்குமதியின் மதிப்பு 15.84 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) சேவைகள் ஏற்றுமதியின் மதிப்பு 325.33 பில்லியன் அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது 2022-23 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) 339.62 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

2022-23 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) 182.05 பில்லியன் அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் 2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) சேவைகள் இறக்குமதியின் மதிப்பு 177.56 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.

2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) சேவை வர்த்தக உபரி 162.05 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2022-23 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) 143.28 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2017942

***

SM/SMB/RS/KV(Release ID: 2017952) Visitor Counter : 80


Read this release in: English , Urdu , Hindi , Marathi