பாதுகாப்பு அமைச்சகம்

கடற்படை விருது வழங்கும் விழா 2024 கோவாவில் நாளை நடைபெறுகிறது

Posted On: 13 APR 2024 4:41PM by PIB Chennai

துணிச்சல், வீர தீரச் செயல்கள், தலைமைத்துவம், தொழில்முறை சாதனை மற்றும் சிறந்த சேவையை வெளிப்படுத்திய கடற்படை வீரர்களைப் பாராட்டுவதற்காக நாளை (2024 ஏப்ரல் 14) கோவாவின் ஐஎன்எஸ் ஹன்சா கடற்படை தளத்தில் "கடற்படை விருது வழங்கும் விழா 2024" நடைபெறுகிறது. இந்த விழாவில், கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.ஹரி குமார் பங்கேற்று, குடியரசுத் தலைவர் சார்பாக, வீரதீர செயல்கள் மற்றும் சிறப்பான சேவை புரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்குவார்.

விழாவின் போது துணிச்சலுக்கான நவ சேனா பதக்கங்கள், அர்ப்பணிப்புக்கான நவ சேனா பதக்கங்கள் மற்றும் விஷிஷ்ட் சேவா பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

இந்த நிகழ்வு ஒரு பாரம்பரிய அணிவகுப்புடன் தொடங்கும். விருது பெறுபவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கடற்படையின் பல மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.

இந்த விழா, 14 ஏப்ரல் 2024 அன்று மாலை 5:00 மணிமுதல் 'இந்திய கடற்படையின் யூடியூப்' சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

***********

SRI/PLM/DL



(Release ID: 2017852) Visitor Counter : 59


Read this release in: English , Urdu , Hindi