வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

'பிரதமரின் கதிசக்தி தேசியப் பெருந்திட்டத்தில் பொருளாதார / பயனர் அமைச்சகங்கள் / துறைகளின் ஒருங்கிணைப்பு' குறித்தப் பயிலரங்கைத் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை ஏற்பாடு செய்திருந்தது

Posted On: 05 APR 2024 4:07PM by PIB Chennai

'பிரதமரின் கதிசக்தி தேசியப் பெருந்திட்டத்தில் பொருளாதார / பயனர் அமைச்சகங்கள் / துறைகளின் ஒருங்கிணைப்பு' குறித்தப் பயிலரங்கை  வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி), புதுதில்லியில் 2024, ஏப்ரல் 3  அன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்தப் பயிலரங்கிற்கு டிபிஐஐடி கூடுதல் செயலாளர் (தளவாடங்கள்) திரு ராஜீவ் சிங் தாக்கூர் தலைமை தாங்கினார்.

ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் சமூக-பொருளாதார உள்கட்டமைப்பின் முழுமையான வளர்ச்சிக்குப் பின்பற்றப்பட வேண்டிய பிரதமரின் கதிசக்திக் கொள்கைகளை அவர் எடுத்துரைத்தார். மேலும், தொடர்புடைய அனைத்து அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் இணக்கமான திட்ட அமலாக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் இந்தியாவின் உள்கட்டமைப்பை மாற்றியமைக்க விரிவான மற்றும் நீடித்த உத்தி இது என்று அவர் மேலும் கூறினார். இந்த "முழு அரசு" அணுகுமுறை, திட்டமிடலில் முடிவெடுப்பதை மேம்படுத்தவும், 'வணிகம் செய்வதை எளிதாக்குதல்', 'வாழ்க்கையை எளிதாக்குதல்' ஆகியவற்றை மேம்படுத்தவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இந்தப் பயிலரங்கில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன், ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயனம், உரங்கள், நிலக்கரி, வர்த்தகம், உணவு மற்றும் பொது விநியோகம், பாதுகாப்புத் தளவாட உற்பத்தி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், பொருளாதார விவகாரங்கள், வருவாய், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளம், மீன்வளம், உணவு பதனத் தொழில்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சுரங்கங்கள், எஃகு, புவி அறிவியல் மற்றும் மருந்துகள். தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாடு ஆகியவற்றைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

***

SM/SMB/RS/RR



(Release ID: 2017249) Visitor Counter : 75


Read this release in: English , Urdu , Hindi