இந்திய போட்டிகள் ஆணையம்
எம்ஜி மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் பங்குகளை இந்தோஎட்ஜ் இந்தியா ஃபண்ட் - லார்ஜ் வேல்யூ ஃபண்ட் (எல்விஎஃப்) திட்டம் வாங்க இந்தியப் போட்டி ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது
प्रविष्टि तिथि:
02 APR 2024 8:42PM by PIB Chennai
எம்ஜி மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் பங்குகளை இந்தோஎட்ஜ் இந்தியா ஃபண்ட் - லார்ஜ் வேல்யூ ஃபண்ட் (எல்விஎஃப்) திட்டம் வாங்க இந்தியப் போட்டி ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.
முன்மொழியப்பட்ட கலவையான நிறுவனங்கள் எம்ஜி மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு மூலதனத்தில் சுமார் 8% வரை (வாக்களிப்பு மற்றும் பொருளாதார உரிமைகளில் 8.70%) இந்தோஎட்ஜ் இந்தியா ஃபண்ட் - எல்விஎஃப் திட்டம் சில உரிமைகளுடன் வாங்குகின்றன.
இந்தோஎட்ஜ் இந்தியா ஃபண்ட் - எல்விஎஃப் திட்டம் என்பது அங்கீகாரம் பெற்ற முதலீட்டாளர்களுக்கான மிகப்பெரிய மதிப்புள்ள நிதி நிறுவனமாகும்.
எம்ஜி மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்பது ஆட்டோமொபைல் உபகரணங்கள் உற்பத்தி, வணிகம் மற்றும் விற்பனை சேவைகளில் ஈடுபட்டுள்ளது. மேலும் முதன்மையாக 'எம்ஜி' பிராண்டின் கீழ் பயணிகள் கார்களை (மின்னணு வாகனங்கள் உட்பட) உற்பத்தி செய்து விற்பனை செய்வதில் இது ஈடுபட்டுள்ளது.
***
(Release ID: 2016982)
AD/SMB/AG/RR
(रिलीज़ आईडी: 2017057)
आगंतुक पटल : 134