இந்திய போட்டிகள் ஆணையம்
ஷேர்கான் லிமிடெட், ஹ்யூமன் வேல்யூ டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் 100% சமபங்குகளை முறையே மிரே அசெட் கேபிடல் மார்க்கெட்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், மிரே அசெட் செக்யூரிட்டீஸ் கோ லிமிடெட் ஆகியவை கூட்டாக வாங்குவதற்கு இந்தியப் போட்டி ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
02 APR 2024 8:45PM by PIB Chennai
ஷேர்கான் லிமிடெட், ஹியூமன் வேல்யூ டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் 100% பங்குகளை முறையே மிரே அசெட் கேபிடல் மார்க்கெட்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், மிரே அசெட் செக்யூரிட்டீஸ் கம்பெனி லிமிடெட் ஆகியவை கூட்டாக வாங்குவதற்கு இந்தியப் போட்டி ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.
மிரே அசெட் செக்யூரிட்டீஸ் கம்பெனி லிமிடெட் (எம்ஏஎஸ்) என்பது கொரியா பங்குச் சந்தையில் தற்போது பட்டியலிடப்பட்டுள்ள ஒரு வரையறுக்கப்பட்ட பொது நிறுவனமாகும். இது செல்வ மேலாண்மை, முதலீட்டு வங்கி, விற்பனை மற்றும் வர்த்தகம், முதன்மை முதலீடு ஆகியவற்றை அதன் முக்கிய வணிகங்களாகக் கொண்டுள்ளது. மிரே அசெட் கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் (எம்ஏசிஎம்) என்பது ஒரு நிதி ஆலோசனை, தரகு நிறுவனம் ஆகும்.
ஷேர்கான் லிமிடெட் தற்போது பங்குத் தரகு மற்றும் தொடர்புடைய சேவைகளின் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது ஹியூமன் வேல்யூ டெவலப்பர்கள் பிரைவேட் லிமிடெட் என்பது ஒரு முதலீட்டு ஹோல்டிங் நிறுவனமாகும். இது ஷேர்கான் லிமிடெட் நிறுவனத்தில் சில பங்குகளை வைத்திருக்கிறது. வேறு எந்த வணிக நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
***
(Release ID: 2016986)
SRI/SMB/AG/RR
(Release ID: 2017022)