புவி அறிவியல் அமைச்சகம்
எதிர்வரும் கோடைக்காலத்தில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை), நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
Posted On:
01 APR 2024 9:10PM by PIB Chennai
இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) 2024 ஏப்ரல் மாதத்திற்கான மழைப் பொழிவு, வெப்பநிலை மற்றும் வரும் கோடைப் பருவத்தில், (ஏப்ரல் முதல் ஜூன் வரை) நிலவும் வெப்பநிலை ஆகியவை குறித்த அறிக்கையை புதுதில்லியில் உள்ள பிரித்வி பவனில் இன்று வெளியிட்டது.
பிரித்வி பவனின் மஹிகா ஹாலில் மெய்நிகர் வடிவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, இந்திய வானிலைத் துறையின் தலைமை இயக்குநர் டாக்டர் மிருத்யுஞ்சய் மொஹாபத்ரா, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கோடைகாலத்தில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பைவிட, அதிகமாக வெப்பநிலை இருக்கும் என்று கூறினார். குறிப்பாக மத்திய இந்தியா மற்றும் மேற்கு தீபகற்ப இந்தியாவில் அதிக வெப்பநிலை நிலவும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த வெப்பமான காலநிலையில் மேற்கு இமயமலை பிராந்தியம், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் வடக்கு ஒடிசாவின் சில பகுதிகளில் இயல்பான அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிடக் குறைவாக இருக்கும் என்று அவர் கூறினார்.
2024 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான வெப்பநிலை குறித்த முக்கிய அம்சங்கள் வருமாறு:
இந்தக் காலகட்டத்தில், கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகள் மற்றும் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளைத் தவிர, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பைவிட அதிகமாக வெப்பநிலை காணப்படும்.
இப்பருவத்தின் போது, வடகிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை இயல்பாகவும், அதைவிட அதிகமாகவும் இருக்கும்.
2024 ஏப்ரல் மாதத்தில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும். இருப்பினும், கிழக்கு, வடகிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவின் சில குறிப்பிட்டப் பகுதிகளில் இயல்புக்கு குறைவாக வெப்பநிலை இருக்கும்.
2024 ஏப்ரல் மாதத்தில் இயல்பான குறைந்தபட்ச வெப்பநிலை வடமேற்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் ஒன்று அல்லது இரண்டு பகுதிகளைத் தவிர, இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மாதாந்திர குறைந்தபட்ச வெப்பநிலை அதிகமாக இருக்கும்.
ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில், தெற்கு தீபகற்பம், மத்திய இந்தியா, கிழக்கு இந்தியா மற்றும் வடமேற்கு இந்தியாவின் சமவெளிகளில் இயல்பை விட வெப்ப அலை அதிகமாக இருக்கும்.
2024 ஏப்ரலில், தெற்கு தீபகற்பம் மற்றும் அருகிலுள்ள வடமேற்கு மத்திய இந்தியாவின் பல பகுதிகள் மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகள் மற்றும் வடமேற்கு இந்தியாவின் சமவெளிகளில் இயல்பான வெப்ப அலை நிலவும்.
2024 ஏப்ரல் மாதத்தில் மழைப்பொழிவு, நாடு முழுவதும் சராசரியாக, இயல்பானதாக இருக்கும். வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் மத்திய இந்தியாவின் பல பகுதிகள், வடக்கு தீபகற்ப இந்தியா, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் இயல்பான மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகள், கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகள் மற்றும் மேற்கு மத்திய இந்தியாவில் இயல்பை விட குறைவான மழை பெய்யக்கூடும்.
2024 ஏப்ரல்-ஜூன் மாதத்திற்குள் எல் நினோவிலிருந்து என்சோ-நடுநிலைக்கு மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது என்றும், அதன்பிறகு, 2024 ஜூன் முதல் ஆகஸ்ட் வரை லா நினா நிலவும் என்றும்தலைமை இயக்குநர் தெரிவித்தார்.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (என்டிஎம்ஏ) தலைவர் திரு கமல் கிஷோர், வெப்ப அலையின் தாக்கத்தை குறைக்கும் வழிகாட்டு நடைமுறைகள் குறித்து விளக்கினார். வெப்பத்துக்கு இலக்காகும் 23 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், வெப்பத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளும் ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும் வெப்ப அலையிலிருந்து தற்காத்துக்கொள்ள மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஊடகங்கள் வாயிலாக ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அறிவுறுத்தல்கள் அனைத்து மாநில சுகாதாரத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் உள்ள 150 முக்கியமான நீர்த்தேக்கங்களில் தண்ணீரின் இருப்புநிலையை ஜல் சக்தி அமைச்சகம் கண்காணித்து வருவதாகவும் டாக்டர் மொஹாபத்ரா கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2016857
***
SRI/PKV/AG/KV
(Release ID: 2016896)
Visitor Counter : 224