பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
கம்போடியாவின் சிவில் ஊழியர்களுக்கு பொதுக் கொள்கை மற்றும் ஆளுகை தொடர்பான இரண்டு வாரகால 4-வது பயிற்சி, நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் தொடங்கியது
प्रविष्टि तिथि:
28 MAR 2024 6:27PM by PIB Chennai
கம்போடியாவின் சிவில் ஊழியர்களுக்கு பொதுக் கொள்கை மற்றும் ஆளுமை குறித்த இரண்டு வாரகால 4-வது பயிற்சி முசோரியில் உள்ள நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சி வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து 2024 மார்ச் 26 முதல் 2024 ஏப்ரல் 6 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முசோரி மற்றும் புதுதில்லியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் கம்போடியாவின் ஆய்வு அமைச்சகம், கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தைச் சேர்ந்த இயக்குநர், துணை இயக்குநர், தலைமை அதிகாரி உள்ளிட்ட 39 அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் தலைமை இயக்குநரும், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் செயலாளருமான திரு வி.ஸ்ரீனிவாஸ் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இரு நாடுகளுக்கும் இடையேயான வரலாற்றுபூர்வ உறவுகள் மற்றும் நாகரீகங்கள் பற்றி எடுத்துரைத்தார். சிறந்த கொள்கை வகுத்தல், சேவை வழங்குதல், நிறுவனங்களின் மாற்றம் செய்தல், அரசுக்கு நெருக்கமாக மக்களைக் கொண்டு வருவதை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் இந்தியாவில் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதையும் எடுத்துக்காட்டி, இந்தியாவின் ஆளுகை மாதிரியையும் அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
ஆளுமையில் மாறிவரும் முன்னுதாரணம், வளர்ச்சியடைந்த பாரதம் @ 2047 ஆகியவற்றை உள்ளடக்கிய பாடத்திட்டத்தின் தலைப்புகளைப் பற்றி இணை பேராசிரியர் மற்றும் பாடநெறி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பி.எஸ்.பிஷ்ட், சுருக்கமான அறிமுகத்தை வழங்கினார்.
பயிற்சித் திட்டத்தின் ஒட்டுமொத்த மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்பை இணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சஞ்சீவ் சர்மா, மேற்கொள்வார்.
----
(Release ID: 2016587)
ANU/SM/SMB/KPG/KRS
(रिलीज़ आईडी: 2016597)
आगंतुक पटल : 152