பாதுகாப்பு அமைச்சகம்

இந்தியக் கடற்படையின் தற்போதைய கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் ('ஆபரேஷன் சங்கல்ப்') 14 டிசம்பர் 23 முதல் 23 மார்ச் 24 வரை 100 நாட்கள் நிறைவு

Posted On: 23 MAR 2024 4:07PM by PIB Chennai

கடல்சார் களத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் மோதலின் வெளிப்பாட்டிற்கு டிசம்பர் 23 நடுப்பகுதியில் இருந்து நடந்து வரும் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளின் நோக்கத்தை மறுசீரமைத்து கணிசமாக விரிவுபடுத்துவதன் மூலம் இந்தியக் கடற்படை பதிலளித்துள்ளது. டிசம்பர் 14, 23 அன்று மால்டா கொடியிடப்பட்ட  எம்வி ரூன் கடத்தலின் போது, கடற்படை செயலூக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டது.  'ஆப்பரேஷன் சங்கல்ப்' என்ற பெயரில் நடந்து வரும் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள்  100 நாட்களை  இன்று (23 மார்ச் 2024) நிறைவு செய்கிறது. இந்த நேரத்தில், இந்திய கடற்படை 18 சம்பவங்களுக்கு பதிலளித்துள்ளது மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் 'முதலில் பதிலளிப்பவர்' மற்றும் 'விருப்பமான பாதுகாப்புப் பங்காளியாக' முக்கிய பங்கு வகித்துள்ளது.எம்வி ரூன் கடத்தப்பட்டதற்கு எதிரான நடவடிக்கைகளின் உச்சக்கட்டத்துடன் இந்தியக் கடற்படை பங்களிப்பின் முக்கியத்துவம் மேலும் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

கடந்த 100 நாட்களிலிருந்து, கடற்படைக் கப்பல்கள், விமானங்கள் மற்றும் சிறப்புப் படைகள் 'கடலைப் பாதுகாப்பதற்கும்' பிராந்தியத்தில் நிலவும் பல்வேறு பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்களிலிருந்து கடல்சார் சமூகத்தைப் பாதுகாப்பதற்கும் ஓர் உறுதியான தீர்மானத்தை வெளிப்படுத்தியுள்ளன. பிராந்தியத்தில் அச்சுறுத்தல் மதிப்பீட்டின் அடிப்படையில், இந்தியக் கடற்படை ஏடன் வளைகுடா மற்றும் அருகிலுள்ள பகுதிகள், அரபிக்கடல் மற்றும் சோமாலியாவின் கிழக்கு கடற்கரை ஆகிய மூன்று பகுதிகளில் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டிசம்பர் 23 முதல் இந்தியக் கடற்படையின்  கடினமான முயற்சிகளில் கடலில் 5000 க்கும் மேற்பட்ட பணியாளர்களை நிறுத்துதல், 450 க்கும் மேற்பட்ட கப்பல் நாட்கள் (21 க்கும் மேற்பட்ட கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன) மற்றும் கடல் களத்தில் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கடல் கண்காணிப்பு விமானம் மூலம் 900 மணிநேரம் பறத்தல் ஆகியவை அடங்கும்.

டிசம்பர் 2023 முதல் நடந்து வரும் முயற்சியில், குருகிராமில் உள்ள இந்திய கடற்படையின் தகவல் இணைவு மையம் - இந்தியப்  பெருங்கடல் பிராந்தியம் தகவல் பரிமாற்றத்தை செயல்படுத்துவதற்கான முக்கிய மையமாக உருமாறும் பங்கினைக் கொண்டுள்ளது. மேலும், இந்தக் காலகட்டத்தில் இந்திய விமானப் படை மற்றும் தேசிய முகமைகளுடனான ஒருங்கிணைந்த தூதுக்குழுக்களும் சேவைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் இயங்குதன்மையை எடுத்துக்காட்டியுள்ளன.

கடல் நலன்களைப் பாதுகாப்பது, கடல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது, கடற்கொள்ளையைத் தடுப்பது மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை கணிசமாகக் குறைப்பது ஆகியவற்றில் உருவாக்கப்பட்ட விளைவுகளின் காரணமாக இந்தியக் கடற்படை சர்வதேசப் பாராட்டைப் பெற்றுள்ளது. கடலோடிகளின் தேசிய  இனத்தைப் பொருட்படுத்தாமல், 'கடலில் உயிர் பாதுகாப்பு' என்பது ஒரு முக்கிய கோட்பாடாக உள்ளது என்பதை இந்தியக் கடற்படையின் பல்வேறு பாதுகாப்பு சூழ்நிலைகளுக்கான  பதிலளிப்பு மீண்டும் நிரூபித்துள்ளது.

***

ANU/AD/SMB/DL



(Release ID: 2016223) Visitor Counter : 97


Read this release in: English , Urdu , Marathi , Hindi