தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
குஜராத்தின் தொலைத் தொடர்புத் துறை தனது தொலைத்தொடர்பு வசதி மையத்தை மார்ச் 21-ம் தேதி தொடங்கியது
Posted On:
22 MAR 2024 4:59PM by PIB Chennai
இந்தியாவில் தொலைத் தொடர்புத் துறை ஒரு உருமாறும் நிலையில் உள்ளது. இது 5G மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்களின் முன்னேற்றங்களால் தூண்டப்படுகிறது. இந்த வளர்ச்சியில் ஸ்டார்ட் அப்கள், எம்எஸ்எம்இ மற்றும் கல்வியாளர்கள் முக்கிய பங்குதாரர்களாக உள்ளனர். இதன் தொடர்ச்சியாக குஜராத்தின் தொலைத் தொடர்புத் துறை தனது தொலைத் தொடர்பு வசதி மையத்தை மார்ச் 21-ம் தேதி தொடங்கியது.
இந்த மையம் தொலைத் தொடர்புத் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஸ்டார்ட் அப்கள், எம்.எஸ்.எம்.இ.க்கள், கல்வியாளர்கள், உரிமதாரர்கள், பதிவு செய்தவர்கள் போன்ற பல்வேறு பங்குதாரர்களுக்கு ஒழுங்குமுறை செயல்முறைகளை வழிநடத்துவதோடு மட்டுமல்லாமல், துறையின் பல்வேறு திட்டங்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் புதுமைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றில் இது உதவும். மேலும் தொலைத் தொடர்புத் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதை இந்த மையம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அகமதாபாதில் இதன் அலுவலகம் அமைந்துள்ளது.
-----
ANU/PKV/KPG/KRS
(Release ID: 2016152)
Visitor Counter : 112