பாதுகாப்பு அமைச்சகம்
ஐஎன்எஸ் சில்கா கடற்படை தளத்தில் அக்னி வீரர்கள் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நடைபெற்றது
Posted On:
16 MAR 2024 4:44PM by PIB Chennai
அக்னி வீரர்களின் மூன்றாவது தொகுதியின் (02/2023) கண்கவர் பயிற்சி நிறைவு அணிவகுப்பு (POP), நேற்று (15 மார்ச் 24) ஒடிசாவில் உள்ள ஐஎன்எஸ் சில்கா கடற்படை தளத்தில் நடைபெற்றது. கடற்படைத் தலைமை தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் இந்த அணிவகுப்பைப் பார்வையிட்டார். 396 பெண் அக்னி வீராங்கனைகள் உட்பட மொத்தம் 2,630 அக்னிவீரர்கள் இந்த பிரிவில் தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி பெற்று அணிவகுப்பில் பங்கேற்ற வீரர்களை கடற்படைத் தலைமைத் தளபதி பாராட்டினார். உலகளாவிய பாதுகாப்பு சூழ்நிலையில் புதிய சவால்கள் உருவாகி வருவதை சுட்டிக்காட்டிய அவர், இந்த நிலையில் பெற்ற பயிற்சியை தேவையான சூழலில் சிறப்பாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். அக்னிவீரர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், தொழில்நுட்ப அறிவை மேம்படுத்திக் கொள்ளவும் வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். கடற்படையின் முக்கிய மதிப்புகளான கடமை, அர்ப்பணிப்பு மற்றும் தைரியத்தை நிலைநிறுத்தி, தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்றும் கடற்படைத் தலைமைத் தளபதி திரு ஹரி குமார் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் சிறந்த அக்னிவீரர்களுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
***
ANU/AD/PLM/DL
(Release ID: 2015233)
Visitor Counter : 92