ஊரக வளர்ச்சி அமைச்சகம்
தீன்தயாள் அந்தியோதயா யோஜனா மற்றும் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ளடக்கிய வளர்ச்சியை அமல்படுத்துவதில் தொழில்நுட்ப உதவிகளை வழங்க தெற்காசியாவின் ஜே-பால் – உடன் ஊரக மேம்பாட்டு அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
Posted On:
15 MAR 2024 2:42PM by PIB Chennai
மத்திய அரசின் ஊரக மேம்பாட்டு அமைச்சகம், தெற்காசியாவில் உள்ள அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை நடவடிக்கை ஆய்வகத்துடன் (ஜே-பால்) ஐ.எஃப்.எம்.ஆரில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை நடவடிக்கை ஆய்வகம், நிதி மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் கிராமப்புற ஏழைப் பெண்களை தன்னிறைவுக்கான பாதையில் கொண்டு செல்ல உள்ளடக்கிய வளர்ச்சியில் அறிவுசார் பங்குதாரராக செயல்படும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு சரண்ஜித் சிங் மற்றும் ஜே-பால் தெற்காசிய செயல் இயக்குநர் திருமதி ஷோபினி முகர்ஜி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
ஜே-பால் மற்றும் வறுமை நடவடிக்கைக்கான கண்டுபிடிப்புகளுடன் இணைந்த ஆராய்ச்சியாளர்களின் சீரற்ற மதிப்பீடுகள் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களை வறுமையிலிருந்து உயர்த்துவதில் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது . இந்தக் கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, முடிவெடுப்பதில் அறிவியல் சான்றுகள் மற்றும் தரவுகளை ஏற்றுக்கொள்வதில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ஜே-பால் தெற்காசியா ஆதரவு அளிக்கும்.
தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றில் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், தகவல் பயன்பாட்டை நிறுவனமயமாக்கவும் பாலின தாக்க ஆய்வகத்தை அமைக்க ஜே-பால் தெற்காசியா அமைச்சகத்துடன் இணைந்து செயல்படும்.
தீன்தயாள் அந்தியோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், 10.04 கோடிக்கும் அதிகமான மகளிரை 90.76 லட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களாக ஒருங்கிணைத்து, உலகின் மிகப்பெரிய சமூக அணிதிரட்டல் முயற்சிகளில் ஒன்றாகும். நிதி உள்ளடக்கம், டிஜிட்டல் பாதுகாப்பு, நிலையான வாழ்வாதாரங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு தலையீடுகளை இந்த திட்டம் ஊக்குவிக்கிறது. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, கண்ணியமான வாழ்க்கையை வாழ அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2014887
***
SM/BS/AG/KV
(Release ID: 2014924)
Visitor Counter : 116