சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய மனநலம் மற்றும் மறுவாழ்வு மையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சேவைப் பிரிவை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் திறந்து வைத்தார்

प्रविष्टि तिथि: 13 MAR 2024 4:47PM by PIB Chennai

மத்தியப்பிரதேச மாநிலம் செஹோரில் உள்ள தேசிய மனநலம் மற்றும் மறுவாழ்வு மையத்தில் புதிதாக கட்டப்பட்ட சேவை பிரிவை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார்திறந்து வைத்தார்.  

இப்பிரிவை கட்டுவதற்கு 2018 ம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் கோவிட் 19 தொற்றுநோய் பரவல் காலங்களுக்கு பிறகு அதன் கட்டுமானப் பணி விரைவுப்பெற்றது. மனநல உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான உறுதியான அர்ப்பணிப்புடன்இந்த அதிநவீன வசதியின் கட்டுமானத்திற்காக மத்திய அரசு மொத்தம் ரூ. 105 கோடியை முதலீடு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் வீரேந்திர குமார்,  மாற்றுத்திறனாளி சமூகத்தினருக்கு அனைத்தையும் உள்ளடக்கிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்தார். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான கூட்டு முயற்சிகளையும்இந்த முயற்சியில் அரசு சாரா அமைப்புகள் மற்றும் சிவில் சமூகங்களின் இன்றியமையாத பங்கையும் அவர் சுட்டிக்காட்டினார். புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த மையத்தில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள  தனிநபர்களுக்கு விரிவான மனநலம் மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்க தயாராக உள்ளதாக டாக்டர் வீரேந்திர குமார் குறிப்பிட்டார்.

***

(Release ID: 2014192)

AD/IR/KRS


(रिलीज़ आईडी: 2014334) आगंतुक पटल : 108
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu