நிலக்கரி அமைச்சகம்

நிலக்கரித் துறையில் பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்ட தகவல்களை அதன் தளத்தில் மத்திய அமைச்சர் திரு பிரல்ஹத் ஜோஷி வெளியிட்டார்

Posted On: 13 MAR 2024 3:12PM by PIB Chennai

மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் திரு பிரல்ஹத் ஜோஷி புதுதில்லியில்  இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நிலக்கரித் துறையில் பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்ட தகவல்களை அதன் தளத்தில் வெளியிட்டார்.  பிம்ஜிஎஸ்-என்எம்பி (PMGS-NMP) தளத்தில் நிலக்கரி  அமைச்சகத்தின் இணையப் பக்கத்தில் உள்ள தகவல்கள் நிலக்கரித் துறை குறித்த ஆழமான தகவல்களை வழங்குகிறதுஇன்றைய  நிகழ்வு உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஒருங்கிணைந்த திட்டமிடலில்  அரசின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு பிரல்ஹத் ஜோஷிபிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இது உள்கட்டமைப்பு திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் அவற்றை செயல்படுத்துவதற்கான  நமது அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று அவர் தெரிவித்தார்இந்த பிம்ஜிஎஸ்-என்எம்பி தளம் புவி சார்  அடிப்படையிலானது எனவும் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு இது  பல்வேறு அமைச்சகங்களை ஒருங்கிணைக்கிறது என்றும்  அவர்  கூறினார்.

நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் திரு அம்ரித் லால் மீனா பேசுகையில்நிலக்கரித் துறையில் திட்டமிடல் மற்றும் செயல்பாடுகள் குறித்த  முக்கியமான தகவல்களை சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவரும், இந்த தளத்தின் மூலம் அறிந்து கொள்ள இயலும் என்றார். இதன் மூலம் சரியான நேரத்தில் திட்ட செயலாக்கத்தை  உறுதி செய்யும் என்று அவர்  கூறினார்இந்த முயற்சி செயல்திறனை ஊக்குவித்தல்இடையூறுகளைக் குறைத்தல் மற்றும்  உள்ளடக்கிய  வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.  

பிரதமரின்  விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம் உள்கட்டமைப்புகளுக்கான முழுமையான திட்டமிடலை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்னோடி முயற்சியாகும்பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளின் கீழ் தற்போது நடைபெறும் மற்றும் எதிர்கால திட்டங்களின் விரிவான தரவுகளை இந்த திட்டத்தின் தளம்  வழங்குகிறதுபன்முக ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல்பொருளாதார  வளர்ச்சியைத் துரிதப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் ஆகியவை  இதன் நோக்கங்களாகும்.

*********

AD/PLM/KRS



(Release ID: 2014266) Visitor Counter : 42