புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2024 ஜனவரியில் இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி குறியீடு 3.8% வளர்ச்சி

प्रविष्टि तिथि: 12 MAR 2024 5:30PM by PIB Chennai

தொழில்துறை உற்பத்திக் குறியீட்டெண்ணின் விரைவு மதிப்பீடுகள் ஒவ்வொரு மாதமும் 12-ம் தேதி (அல்லது 12 ஆம் தேதி விடுமுறை நாளாக இருந்தால் முந்தைய வேலை நாள்) ஆறு வார கால தாமதத்துடன் வெளியிடப்படுகின்றனமேலும் மூல முகமை களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளுடன் தொகுக்கப்படுகின்றனஅவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் / நிறுவனங்களிடமிருந்து தரவைப் பெறுகின்றன.

2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில்தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் விரைவான மதிப்பீடுகள் 153.0 ஆக உள்ளது. ஜனவரி  மாதத்திற்கான சுரங்கம்உற்பத்தி மற்றும் மின்சாரத் துறைகளுக்கான தொழில்துறை உற்பத்தியின் குறியீடுகள் முறையே 144.1, 150.1 மற்றும் 197.1 ஆக உள்ளன. தொழில் உற்பத்திக் குறியீட்டின் திருத்தக் கொள்கையின்படிஇந்த விரைவு மதிப்பீடுகள் அடுத்தடுத்த வெளியீடுகளில் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும்.

பயன்பாடு அடிப்படையிலான வகைப்பாட்டின்படிஜனவரி மாதத்தில் முதன்மை பொருட்களுக்கு 154.2, மூலதன பொருட்களுக்கு 109.2, இடைநிலை பொருட்களுக்கு 163.0 மற்றும் உள்கட்டமைப்பு / கட்டுமான பொருட்களுக்கு 185.0 குறியீடுகள் உள்ளன. மேலும்நுகர்வோர் சாதனங்கள் மற்றும் நுகர்வோர் அல்லாத நீடித்த பொருட்களுக்கான குறியீடுகள் ஜனவரி மாதத்தில் முறையே 120.7 மற்றும் 163.9 ஆக உள்ளன.

2024-பிப்ரவரி மாதத்துக்கான குறியீட்டின் அறிவிப்பு ஏப்ரல் 12-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்படும்.

***

PKV/AG/KRS


(रिलीज़ आईडी: 2013828) आगंतुक पटल : 132
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी