பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை சார்பில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது
Posted On:
09 MAR 2024 11:42AM by PIB Chennai
சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளின் ஒரு பகுதியாக "சிவில் சேவையில் பெண்கள்" என்ற கருப்பொருளில் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை நேற்று (08-03-2024) காணொலிக் காட்சி மூலமான கருத்தரங்கத்தை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் விளையாட்டுத் துறை செயலாளர் திருமதி சுஜாதா சதுர்வேதி, உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் செயலாளர் திருமதி அனிதா பிரவீன் மற்றும் அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் சிறப்பு அதிகாரி திருமதி நிதி கரே ஆகியோர் முக்கிய உரையாற்றினர். நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறைதீர்ப்புத் துறைச் செயலாளர் திரு வி.ஸ்ரீனிவாஸ் நிகழ்ச்சியை நெறிப்படுத்தி நடத்தினார்.
பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளைக் கொண்டாடுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினமாக (IWD) கொண்டாப்படுகிறது. மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாலின சமத்துவத்தை அடைவதற்கான கொள்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பாக ஆழமாக விவாதிக்க இந்த நாளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
நேற்றைய காணொலிக் கருத்தரங்கில் உரையாற்றிய விளையாட்டுத் துறை செயலாளர் திருமதி சுஜாதா சதுர்வேதி, இந்திய விளையாட்டுத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள அரசின் கொள்கைகள் குறித்து எடுத்துரைத்தார். ஹாங்சோவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் போது இந்திய தடகள வீராங்கனைகளின் சிறந்த செயல்திறனை அவர் பாராட்டினார்.
நுகர்வோர் விவகாரங்கள் துறையின் சிறப்புப் பணி அதிகாரி திருமதி நிதி கரே நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதில் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின பங்கை எடுத்துரைத்தார். உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளர் திருமதி அனிதா பிரவீன், பெண்களை மையமாகக் கொண்ட பல திட்டங்களை உணவு பதப்படுத்துதல் அமைச்சகம் செயல்படுத்துவதை விளக்கினார்.
நிர்வாக சீர்திருத்தங்கல் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை இணைச் செயலாளர் திருமதி ஜெயா துபே நன்றியுரை வழங்கினார்.
***
ANU/AD/BS/DL
(Release ID: 2012961)