சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை இந்திய மின்னணுவியல் துறை திறன் கவுன்சிலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
Posted On:
09 MAR 2024 9:56AM by PIB Chennai
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் திறன் மேம்பாட்டை முன்னெடுப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை, இந்திய மின்னணு துறை திறன் கவுன்சிலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
திரு ராஜேஷ் அகர்வால் தலைமையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், மின்னணுத் துறையில் பல்வேறு வேலைகளுக்கு தேவையான திறன்களுடன் மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் 08.03.2024 அன்று மேற்கொள்ளப்பட்டது
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப தொழிற்பயிற்சி மூலம் மனித வளத்தை வளர்ப்பதற்கான கூட்டு முயற்சியைக் குறிக்கிறது. இஎஸ்எஸ்சிஐ -ன் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதன் மூலம், இந்த முயற்சி நிலையான வாழ்வாதாரங்களுக்கான பாதைகளை உருவாக்குவதையும், உலகளவில் போட்டி நிறைந்த பணியாளர்களை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ், தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்.சி.வி.இ.டி) பாடத் திட்ட தரநிலைகளுக்கு ஏற்ப மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் பயிற்சி வழங்க இஎஸ்எஸ்சிஐ உறுதியளிக்கிறது. கூடுதலாக, பயிற்சியாளர்களுக்கு தடையற்ற வேலை வாய்ப்புகளை உறுதி செய்வதற்காக சாத்தியமான உரிமையாளர்கள் மற்றும் தொழில்துறை கட்டமைப்புகளுடன் ஈடுபாட்டை எளிதாக்கும். முக்கியமாக, குறைந்தபட்ச ஊதியச் சட்டம் மற்றும் தொழில்துறை வரையறைகளுக்கு இணங்க மாத சம்பளத்திற்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளிக்கும்.
மேலும், வேலைவாய்ப்புக்குப் பிந்தைய ஆதரவுக்கான அதன் உறுதிப்பாட்டை நிலைநிறுத்தும். பணியமர்த்தலைத் தொடர்ந்து குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு ஆலோசனை மற்றும் கண்காணிப்பு சேவைகளை வழங்குவதன் மூலம், பணியாளர்களுக்குள் பிடபிள்யூடி-களின் தொடர்ச்சியான வெற்றி மற்றும் ஒருங்கிணைப்பை உறுதி செய்யும்.
இந்த ஒத்துழைப்பு உள்ளடக்கம் மற்றும் பொருளாதார அதிகாரமளித்தலை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது, மின்னணுத் துறையில் மாற்றுத்திறனாளிகள் செழித்து வளர உதவும் சூழலை உருவாக்க மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை மற்றும் இஎஸ்எஸ்சி ஆகியவற்றின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
***
ANU/AD/BS/DL
(Release ID: 2012960)