சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
குஜராத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை மேம்படுத்த ரூ.1532.97 கோடிக்கு நிதின் கட்கரி ஒப்புதல்
Posted On:
08 MAR 2024 2:52PM by PIB Chennai
குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை -151-ஏ-ல் 12.4 கி.மீ நீளமுள்ள துரோல் முதல் அம்ரான் பிரிவு வரையிலான சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்த ரூ.625.58 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
அமிர்தசரஸ்-ஜாம்நகர் வழித்தடம் இந்தப் பிரிவில் விடுபட்ட இணைப்பாக உள்ளது என்று அவர் கூறினார். இந்த விடுபட்ட இணைப்பின் வளர்ச்சி 3 மாநிலங்களில் உள்ள நான்கு சுத்திகரிப்பு நிலையங்களுக்கு இடையிலான இணைப்பை நிறைவு செய்யும். இந்த வழித்தடங்கள் நிறைவடைந்த பிறகு, துரோல்-அம்ரான்-பிப்ஜியா வழித்தடப் பிரிவு தொழில்துறை நகரமான ஜாம்நகருக்கு தடையற்ற இணைப்பை வழங்கும். இந்தப் பாதை பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யும். இப்பகுதியில் தொழிற்சாலைகள் மற்றும் வேளாண் பூங்காக்களின் வசதிகளுடன் சிறந்த இணைப்பு பொருளாதாரச் செழிப்புக்கான கதவுகளை திறக்கும். இது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன் பொருளாதாரச் செழிப்புக்கும் வழிவகுக்கும் என்று திரு கட்கரி தமது சமூக ஊடகப் பதிவில் கூறியுள்ளார்.
மற்றொரு பதிவில், குஜராத்தின் வதோதரா, பரூச் மற்றும் சூரத் மாவட்டங்களில் தேசிய நெடுஞ்சாலை 48-ல் வதோதரா-சூரத் பிரிவில் 15 கி.மீ நீளமுள்ள குழாய்கள் உள்ளிட்ட கூடுதல் கட்டமைப்புகளை ரூ.907.39 கோடி செலவில் நிர்மாணிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று திரு கட்கரி தெரிவித்துள்ளார்.
தங்க நாற்கரச் சாலையின் ஒரு பகுதியான தேசிய நெடுஞ்சாலை 48, தில்லியில் தொடங்கி ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு வழியாக செல்லும் பரபரப்பான தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
***
AD/PKV/RS/KRS
(Release ID: 2012814)
Visitor Counter : 74