சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் 10 கி.மீ நீளமுள்ள உயர்த்தப்பட்ட நான்கு வழிப் பாதை அமைக்க திரு நிதின் கட்கரி ரூ.936.26 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளார்
प्रविष्टि तिथि:
08 MAR 2024 2:55PM by PIB Chennai
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் நகரில் தேசிய நெடுஞ்சாலை 33ல் கலிமந்திர் - திம்னா சௌக்-பாலிகுமா பிரிவில் 10 கி.மீ நீளமுள்ள 4 வழி உயர்த்தப்பட்ட பாதையை ரூ.936.26 கோடி செலவில் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நகரத்தில் அதிகரித்து வரும் போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு, ஜாம்ஷெட்பூர் நகரில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், நெரிசலைக் குறைப்பதற்கும் இந்தச் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார் .
***
(Release ID: 2012661)
AD/PKV/RS/KRS
(रिलीज़ आईडी: 2012798)
आगंतुक पटल : 111