வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
சோன்பத்ராவில் ரூ.10.41 கோடி மதிப்புள்ள 177 வளர்ச்சித் திட்டங்களுக்கு திரு ஹர்தீப் சிங் பூரி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்தத் திட்டங்களை தொடங்கிவைத்தார்
Posted On:
07 MAR 2024 5:05PM by PIB Chennai
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய நடவடிக்கையாக உத்தரபிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் 177 வளர்ச்சித் திட்டங்களை, வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள், பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக திரு பூரியின் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ .10 கோடியே 41 லட்சம் இதற்காக அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியின் போது பேசிய திரு பூரி, சோன்பத்ரா குறிப்பிடத்தக்க வளர்ச்சி முன்னேற்றத்தைக் கண்டு வருவதாகவும், இந்தத் திட்டங்கள் மாவட்டம் அனுபவித்து வரும் தற்போதைய, விரைவான மாற்றத்தை அடையாளப்படுத்துகின்றன என்றும் கூறினார். புதிய பள்ளி கட்டிடங்களுடன் நமது கல்வி நிலப்பரப்பை மேம்படுத்தவும், சமூக மையங்கள் மூலம் சமூக வாழ்க்கையை வளப்படுத்தவும், பயணிகள் காத்திருப்பு அறைகள், கழிப்பறைகள் ஆகியவற்றை நிர்மாணிப்பதன் மூலம் போக்குவரத்து மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தவும் நாங்கள் தயாராக உள்ளோம் என்று அவர் கூறினார்.
***
AD/IR/RS/KRS
(Release ID: 2012352)