அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

அறிவியல், தொழில் ஆராய்ச்சி குழுமம் – தேசிய அறிவியல் தகவல் கொள்கை ஆராய்ச்சிக் கழகம் இணைந்து மின்னணு, சமூக ஊடகம் வாயிலாக சரியான அறிவியல், தொழில்நுட்ப சொற்களைப் பயன்படுத்தி எவ்வாறு அறிவியலை விளக்குவது என்பது குறித்த பயிலரங்கை நடத்தியது

Posted On: 07 MAR 2024 11:37AM by PIB Chennai

சிறந்த நிபுணர்களின் மதிப்புமிக்க கருத்துக்களுடன் அறிவியல் ஊடக தகவல் பிரிவுக்கு அதிகாரமளித்தல் குறித்த பயிலரங்கை அறிவியல், தொழில் ஆராய்ச்சி குழுமம் (சிஎஸ்ஐஆர்) – தேசிய அறிவியல் தகவல் கொள்கை ஆராய்ச்சிக் கழகம் (என்ஐஎஸ்சிபிஆர்) 2024 மார்ச் 6 அன்று நடத்தியது.

புதுதில்லி, பூசாவில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்-என்.ஐ.எஸ்.சி.பி.ஆர்-ல் இந்தப் பயிலரங்கு நடைபெற்றது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சொற்கள் ஆணையத்தின் உதவி இயக்குநர் டாக்டர் அசோக் செல்வவாட்கர் கலந்துகொண்டு பேசிய போது, அறிவியல், தொழில்நுட்ப பரவலில் தொழில்நுட்பத் துறைச் சார்ந்த சொற்களின் பங்களிப்புக் குறித்த தமது கருத்தைப் பகிர்ந்து கொண்டார். பல்வேறு அறிவியல் களங்களின் சமீபத்திய அறிவியல், தொழில்நுட்ப சொற்களைப் பயன்படுத்துவது குறித்து பயிலரங்கில் பங்கேற்றவர்களுக்கு அவர் பயிற்சி அளித்தார்.

அகில இந்திய வானொலியின் (தில்லி நிலையம்) அறிவியல் பிரிவின் நிகழ்ச்சி நிர்வாகி திருமதி பிரியங்கா திவாரி உரையாற்றியபோது, இந்திய ஆய்வகங்களின் அறிவியல், தொழில்நுட்பச் சாதனைகளை ஆகாஷ்வானி மூலம் எவ்வாறு திறம்பட ஒலிபரப்புவது என்பது குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். வானொலியில் அறிவியலைத் திறம்பட விளக்குவதில் ஈடுபட்டுள்ள நுட்பங்கள் மற்றும் முறைகள் குறித்த சிறப்பான ஆலோசனைகளை திருமதி திவாரி வழங்கினார்.

தூர்தர்ஷனின் ஆலோசகர் திரு பாரத் பூஷண், சமூக ஊடகங்கள் மூலம் அறிவியலைப் பரப்புவதற்கான புதுமையான வழிகள் குறித்த விளக்கக்காட்சியை வழங்கினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2012111

***

PKV/IR/RS/KV

 


(Release ID: 2012165) Visitor Counter : 86


Read this release in: English , Urdu , Hindi