மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

திருவனந்தபுரம், கொச்சியில் 2 இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவை மத்திய அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் திறந்து வைத்தார்

Posted On: 06 MAR 2024 6:56PM by PIB Chennai

கேரளாவில் புத்தொழில், தகவல் தொழில் நுட்பத்துறை, மின்னணு துறைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், திருவனந்தபுரம், கொச்சியில் 2 இந்திய தகவல் தொழில்நுட்ப பூங்காவை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் திறந்து வைத்தார். பின்னர் அங்கு தொழில் காப்பகத்தை அவர் பார்வையிட்டார்.

அப்போது பேசிய அவர், எதிர்வரும்  பாரத் செமிகண்டக்டர் ஆராய்ச்சி மையம் திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தில் ஒரு பிராந்திய மையத்தைக் கொண்டிருக்கும் என்றும் அவர் அறிவித்தார். இது நகரத்தின் புத்தொழில், தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பை ஊக்குவிக்கும் என்று அவர் கூறினார். கேரளாவில் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவித்தல் என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார்.

இந்த மையங்கள் கேரளாவின் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும், வளர்ந்து வரும் தொழில்நுட்ப தொடக்கங்களுக்கு அதிநவீன வசதிகளை வழங்குவதிலும், அதன் மூலம் உலக அளவில் புதுமைகளைப் புகுத்தவும், வளரவும், போட்டியிடவும் உதவுவதில் முக்கிய பங்கு வகிக்க தயாராக உள்ளன.

***

AD/IR/RS/KRS



(Release ID: 2012044) Visitor Counter : 77


Read this release in: English , Urdu , Hindi , Malayalam