ஜல்சக்தி அமைச்சகம்

அணைகளுக்கான சர்வதேச சிறப்பு மையத்தை நிறுவுவதற்காக பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்துடன் நீர்வளத்துறை அமைச்சகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது

Posted On: 06 MAR 2024 1:29PM by PIB Chennai

உலகளாவிய நிறுவனங்களுக்கு இணையான திறன் மற்றும் நிபுணத்துவத்தை மேம்படுத்தவும், அணை பாதுகாப்பில் 'மேக் இன் இந்தியா' அதிகாரம் பெறவும், தேசிய நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கான மத்திய அரசின் ஒட்டுமொத்த முயற்சியின் ஒரு பகுதியாக, மத்திய நீர்வள ஆணையம், நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை தூய்மைப்படுத்துதல் துறை, நீர்வள  அமைச்சகம், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்துடன் அணைகளுக்கான சர்வதேச சிறப்பு மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டு, மூன்றாம் கட்டத்தின் கீழ், இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நாளிலிருந்து 10 ஆண்டுகள் அல்லது அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டங்களின் காலம் வரை, இதில் எது முன்கூட்டியே நிறைவடைகிறதோ அதுவரை செல்லுபடியாகும்.

இந்தியா மற்றும் வெளிநாட்டு அணை உரிமையாளர்களுக்கு விசாரணைகள், வடிவமைப்பு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப ஆதரவு ஆகிய சேவைகளில் சிறப்பு தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்காக நீர்வள அமைச்சகத்தின் தொழில்நுட்பப் பிரிவாக அணைகளுக்கான சர்வதேச சிறப்பு மையம் செயல்படும். இந்த மையம் அணை பாதுகாப்பு குறித்து அமைச்சகத்திற்கு ஆதரவளிக்கவும், அறிவியல் ஆராய்ச்சி மூலம் அணை பாதுகாப்பில் எதிர்கொள்ளும் பல்வேறு வளர்ந்து வரும் சவால்களுக்கு தீர்வுகளை வழங்கவும் பணியாற்றும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2011854

***

AD/IR/RS/RR(Release ID: 2011895) Visitor Counter : 73


Read this release in: Telugu , English , Urdu , Hindi