சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

கர்நாடக மாநிலம் பாகல்கோட், பெல்காவி மாவட்டங்களில் பெல்காம் - ஹுன்குண்ட்- ராய்ச்சூர் பிரிவில் ரூ.2675.31 கோடியில் தேசிய நெடுஞ்சாலை -748 ஏ– நான்கு வழிச்சாலையாக மாற்ற திரு நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார்

Posted On: 06 MAR 2024 12:11PM by PIB Chennai

கர்நாடக மாநிலம் பாகல்கோட், பெல்காவி மாவட்டங்களில் பெல்காம் - ஹுன்குண்ட்-ராய்ச்சூர் பிரிவில் ரூ.2675.31 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை -748- நான்கு வழிச்சாலையாக மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறைத் அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த சாலை மொத்தம் 92.40 கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்பட உள்ளதாகவும், இந்த முயற்சி பனாஜி-ஹைதராபாத் இசி10 வழித்தடத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்றும் அவர் கூறினார்

மீன்பிடித்தல், சுற்றுலா, வேளாண்மை, மருந்து உற்பத்தி தொழில்களின் முக்கியப் பகுதியாக திகழும் பனாஜி உள்ளிட்ட தொழில்துறை மையங்களை இசி10  வழித்தடம் இணைக்கிறது. பெல்காவி பகுதி உணவு தானியங்கள், கரும்பு, பருத்தி, புகையிலை, எண்ணெய் வித்துக்கள் மற்றும் பால் பொருட்களுக்கு புகழ்பெற்றது. ராய்ச்சூர் பகுதி அரிசி, பருத்தி, நிலக்கடலை, பருப்பு வகைகளுக்கு அங்கீகரிக்கப்பட்டப் பகுதியாகும்.  ஹைதராபாத் பகுதி தகவல் தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி, சுகாதாரம் ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறது.

***

(Release ID: 2011825)

AD/IR/RS/RR



(Release ID: 2011842) Visitor Counter : 54


Read this release in: English , Urdu , Hindi