மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
"திருவனந்தபுரத்தில் உள்ள மலையாள இளைஞர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் திறனின்றி இருக்க மாட்டார்கள்" - மத்திய இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர்
Posted On:
05 MAR 2024 5:33PM by PIB Chennai
திருவனந்தபுரத்தில் உள்ள அனைத்து மலையாள இளைஞர்களுக்கும் எதிர்காலத்திற்குத் தேவையான திறன்கள் கிடைப்பதை நரேந்திர மோடி அரசு உறுதி செய்யும் என்று மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, தொழில்முனைவோர், நீர்வளத் துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மார் இவானியோஸ் கல்லூரியில் இன்று உரையாற்றிய அவர், பிரதமரின் இளைஞர் மேம்பாடு 4.0 திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளில் கேரளாவில் சுமார் 4 லட்சம் இளைஞர்கள் திறன் பெற்றிருப்பார்கள் என்று அவர் கூறினார்.
"அறிவு என்பது சக்தியாக இருந்தாலும், அதைவிட சக்தி வாய்ந்தது திறன்களுடன் கூடிய அறிவு என்று அவர் தெரிவித்தார். அடுத்த 5 ஆண்டுகளுக்குள், திருவனந்தபுரத்தில் உள்ள மலையாள இளைஞர்கள் இனி திறனின்றி இருக்கக்கூடாது என்ற வகையில் நரேந்திர மோடி அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் வடிவமைத்த ஜெர்மன் சான்றிதழ் படிப்பை முடித்த மாணவர்களுக்கு அமைச்சர் சான்றிதழ்களை வழங்கினார். கேரளாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்த செவிலியர்களுக்கு ஜெர்மனியில் மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்துடன் வேலை வழங்கப்பட்டுள்ளது. திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் வடிவமைத்த மொழித் தேர்ச்சி திட்டத்தையும் திரு ராஜீவ் சந்திரசேகர் தொடங்கி வைத்தார்.
***
(Release ID: 2011748)