சுரங்கங்கள் அமைச்சகம்
இந்திய புவியியல் ஆய்வகத்தின் 174வது நிறுவன தினம் கொண்டாட்டம்
Posted On:
04 MAR 2024 5:46PM by PIB Chennai
நாடு முழுவதும் உள்ள இந்திய புவியியல் ஆய்வகத்தின் அலுவலகங்களில் 174வது நிறுவன தின விழா 2024 மார்ச் 4ம்தேதி இன்று பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள மத்திய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிறுவன தினவிழா கொண்டாட்டத்தை இந்திய புவியியல் ஆய்வகத்தின் இயக்குநர் தலைமை திரு ஜனார்த்தன் பிரசாத் தொடங்கி வைத்தார்.
இந்த கொண்டாட்டத்தின் போது இந்திய புவியியல் ஆய்வகத்தை நிறுவிய டாக்டர் தாமஸ் ஓல்ட்ஹாம், முதலாவது இந்திய தலைவர் டாக்டர் எம்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதைப்படிவங்கள், கனிமங்கள், பாறைகள் ஆகியவற்றைக் கொண்ட கண்காட்சியும் நடைபெற்றது. கொல்கத்தா மற்றும் அதன் புறநகரில் உள்ள கல்லூரிகளின் மாணவர்கள் இந்த கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
***
Release ID: 2011322
AD/BS/KRS
(Release ID: 2011387)
Visitor Counter : 105