எரிசக்தி அமைச்சகம்
லைன்மேன் தினத்தின் 4வது பதிப்பை முன்னிட்டு மின்துறையின் முன்னிலை பணியாளர்களை மத்திய மின்வாரியம் கெளரவித்தது
Posted On:
04 MAR 2024 5:07PM by PIB Chennai
புதுதில்லியில் 2024 மார்ச் 4ம் தேதி லைன்மேன் தினத்தின் 4வது பதிப்பை முன்னிட்டு இன்று நடைபெற்ற நிகழ்வில் மின்துறையின் முன்னிலை பணியாளர்களை மத்திய மின்வாரியம் கெளரவித்தது. நாட்டின் மின் விநியோகத்துறையின் முதுகெலும்பாக ஓய்வின்றி கள நிர்வாகத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வரும் பணியாளர்கள் மற்றும் லைன்மேன்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் லைன்மேன் தினம் கொண்டாடப்படுகிறது.
தில்லி, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஒடிசா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஜம்மு&காஷ்மீர், கர்நாடகா, ஜார்கண்ட், ஹரியாணா, குஜராத், பீகார், ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட 40 மாநிலங்கள் மற்றும் தனியார் மின் விநியோக நிறுவனங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட லைன்மேன்கள், லைன்மேன் ஆக பணியாற்றும் மகளிர் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
நாடுமுழுவதும் இருந்து வந்திருந்த லைன்மேன்களின் சேவை, தியாகம், அர்ப்பணிப்பு உணர்வை போற்றும் வகையில் சேவை, பாதுகாப்பு, சுயமரியாதை என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் டாடா பவர் தில்லி விநியோக நிறுவனத்தோடு இணைந்து லைன்மேன்களை கெளரவிக்கும் விழா நடைபெற்றது.
நிகழ்வை முன்னிட்டு மத்திய மின்துறை மற்றும் புதிய & மரபுசாரா எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் வெளியிட்ட வீடியோ செய்தியில், லைன்மேன் ஆக பணியாற்றும் ஆண்கள், பெண்களின் மதிப்பிடமுடியாத பங்களிப்பை சிறந்த முறையில் ஊக்குவிக்கும் வகையில் லைன்மேன் தினத்தை கொண்டாடும் கலாச்சாரம் தொடங்கப்பட்டது. எதிர்பாரத தருணங்களில் நேரிடும் சிக்கல்கள், மிகவும் மோசமான வானிலை போன்ற சமயங்களில் சவாலான பணிகளை எதிர்கொண்டு பணியாற்றும் கதாநாயகர்களின் மதிப்பிட முடியாத பணியை அங்கீகரிப்பதில் மிகவும் பெருமிதம் கொள்கின்றோம் என்று கூறியுள்ளார்.
Release ID: 2011273
AD/BS/KRS
(Release ID: 2011358)
Visitor Counter : 95