கனரகத் தொழில்கள் அமைச்சகம்
மனேசரில் உள்ள சர்வதேச வாகன உற்பத்தி தொழில்நுட்ப மையம், ஓலா மின்சார தொழில்நுட்ப நிறுவனத்துக்கு சான்றிதழை வழங்கியது.
Posted On:
04 MAR 2024 4:58PM by PIB Chennai
மத்திய அரசு கனரக தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய வாகன உற்பத்தி வாரியத்தின் பிரிவுகளில் ஒன்றான மானேசரில் உள்ள சர்வதேச வாகன உற்பத்தி தொழில்நுட்ப மையம், ஓலா மின்சார தொழில்நுட்ப தனியார் முதலாவது உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு – வாகன உற்பத்திச் சான்றிதழை வழங்கியது.
இந்தச் சான்றிதழை கனரகத் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ், கூடுதல் செயலாளர் டாக்டர் ஹனீப் குரேஷி, ஓலா மின்சார நிறுவனத்தின் தலைமைப் பொறியாளர் டாக்டர் எஸ் ஜே தினகரிடம் வழங்கினார்.
இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ், உள்நாட்டு உற்பத்திச் சூழலை வலுப்படுத்தும் வகையில், செயல்பட்டதற்காக அவர்களுக்கு இந்தச் சான்றிதழ் அளிக்கப்பட்டது.
***
PKV/IR/RS/KRS
(Release ID: 2011351)