நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதமாக திகழும் வகையில் நாட்டை வேளாண்மைத் துறை வழிநடத்தும்: திரு பியூஷ் கோயல்

Posted On: 04 MAR 2024 5:23PM by PIB Chennai

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதமாக திகழும் வகையில் நாட்டை வேளாண்மைத் துறை வழிநடத்தும் என்று மத்திய  நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், வர்த்தகம், தொழில், ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்தார்.

புதுதில்லியில் இன்று நடைபெற்ற கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தின்  இணையதளத்தை அவர் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், லட்சக்கணக்கான இந்தியர்களின் உயிர்களைப் பாதுகாத்ததற்காக விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, தொழில்நுட்பத்தின் உதவியுடன் மின்- வேளாண் உற்பத்தி நிதி முன்முயற்சி விவசாயிகளின் கிடங்கு பொருட்கள் இருப்பை எளிதாக்கும் என்றும் விவசாயிகள் தங்கள் பொருட்களுக்கு நியாயமான விலையைப் பெற உதவும் என்றும்  கூறினார்.

சிறு விவசாயிகள் உட்பட அதிக அளவிலான  விவசாயிகள் கிடங்குகளைப் பயன்படுத்தவும், அவர்களுடைய வருவாயை அதிகரிக்கவும், கிடங்குகளைப் பதிவு செய்வதற்கான பாதுகாப்பு வைப்புத் தொகை விரைவில் குறைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

 விளைபொருட்களை இருப்பு வைக்கும் விவசாயிகள் மூன்று சதவீதம் பாதுகாப்பு வைப்புத்தொகையை செலுத்துவதற்கு பதிலாக 1 சதவீதம்  பாதுகாப்பு வைப்புத்தொகையை மட்டுமே செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

***

SM/IR/RS/KRS



(Release ID: 2011345) Visitor Counter : 79


Read this release in: English , Urdu , Hindi , Bengali-TR