எஃகுத்துறை அமைச்சகம்
நீடித்த எஃகு உற்பத்திக்காக துருப்பிடிக்காத எஃகு துறையில் இந்தியாவின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் ஆலையை மத்திய எஃகு துறைஅமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார்
Posted On:
04 MAR 2024 2:40PM by PIB Chennai
ஹிசாரில் உள்ள ஜிண்டால் ஸ்டெய்ன்லஸ் நிறுவனத்தில் இந்தியாவின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் ஆலையை மத்திய எஃகு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா காணொலிக் காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், பசுமை மற்றும் நீடித்த எதிர்காலத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார். கொவிட் தொற்றுநோய்க்குப் பிந்தைய விளைவுகளிலிருந்து உலக நாடுகள் மீள முயற்சிக்கும் நிலையில், உலகளாவிய சுற்றுச்சூழல் இலக்குகளுக்கு பங்களிப்பதற்கு இந்தியா உறுதியாக உள்ளது என்று கூறினார்.
பாரம்பரியம் மற்றும் நடைமுறைகளில் வலுவான இணைப்பைக் கொண்டுள்ள இந்தியாவின் வளமான சுற்றுச்சூழல் வரலாறு, தற்போது நவீன உத்திகள் மூலம் மறு சீரமைப்பு பெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார். 2070-ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாக கொண்டு வரவேண்டும் என்ற இலக்கை அடைய பசுமை வளர்ச்சி, பசுமைப் பணிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு நிறுவனங்கள், மாநில அரசுகள், பொதுமக்கள், ஆகியோரை ஒரு அரசாக நாங்கள் ஊக்குவித்து வருகிறோம் என்று திரு ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.
***
AD/IR/RS/KRS
(Release ID: 2011295)
Visitor Counter : 140