பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எம்எச் 60 ஆர் 'சீஹாக்' ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படையில் ஐஎன்ஏஎஸ் 334 படைப்பிரிவாக இணைக்கப்பட உள்ளது

Posted On: 03 MAR 2024 4:21PM by PIB Chennai

எம்எச் 60 ஆர் (MH 60R) சீஹாக் பல வகை பணிகளை மேற்கொள்ளும் ஹெலிகாப்டர், 06 மார்ச் 2024 அன்று கொச்சியில் உள்ள ஐஎன்எஸ் கருடா இந்திய கடற்படையின் விமானப்படை தளத்தில் இருந்து கடற்படையில் இணைக்கப்படவுள்ளது.  இது இந்தியாவின் பாதுகாப்பு நவீனமயமாக்கல் பயணத்தில் ஒரு முக்கிய தருணமாகும். சீஹாக் ஹெலிகாப்டர்களின் படைப்பிரிவு இந்திய கடற்படையில் ஐஎன்ஏஎஸ் 334 என இயக்கப்படும்.

இந்த ஹெலிகாப்டர்கள், பிப்ரவரி 2020-ல் அமெரிக்க அரசாங்கத்துடன் கையெழுத்திடப்பட்ட 24 விமானங்கள் சார்ந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக வாங்கப்பட்டதாகும். சீஹாக் ஹெலிகாப்டர்கள் இணைக்கப்படுவதன் மூலம் இந்திய கடற்படை அதன் கடல்சார் வலிமையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டும்.

இந்த ஹெலிகாப்டர் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு (ASW), மேற்பரப்பு எதிர்ப்பு (ASuW), தேடல் மற்றும் மீட்பு (SAR), மருத்துவ காரணங்களுக்காக அவசர மீட்பு (MEDEVAC) உள்ளிட்ட சிக்கலான பணிகளுக்குப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் இந்திய வானிலை (ஐ.ஆர்.ஏ) சூழலில் கடுமையாக சோதிக்கப்பட்ட பிறகு கடற்படையில் இணைக்கப்படுகிறது. சென்சார்கள் மற்றும் ஏவியோனிக்ஸ் தொகுப்பு ஆகிய நவீன அம்சங்கள் சீஹாக்ஸில் உள்ளதால் இந்திய கடற்படையின் கடல்சார் பாதுகாப்பு தேவைகளுக்கு ஏற்றதாக இது அமைந்துள்ளது.

***

ANU/AD/PLM/DL


(Release ID: 2011105) Visitor Counter : 81


Read this release in: English , Urdu , Marathi , Hindi