பாதுகாப்பு அமைச்சகம்
லட்சத்தீவின் மினிக்காய் தீவுப் பகுதியில் ஐஎன்எஸ் ஜடாயு தளத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதன் மூலம் இந்திய கடற்படை தனது செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துகிறது
प्रविष्टि तिथि:
02 MAR 2024 4:11PM by PIB Chennai
இந்திய கடற்படை 06 மார்ச் 2024 அன்று கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் முன்னிலையில் ஐஎன்எஸ் ஜடாயு என்ற பெயரில் கடற்படை படைப்பிரிவுத் தளத்தை தொடங்குகிறது. லட்சத்தீவுகளில் பாதுகாப்பு உள்கட்டமைப்பை அதிகரிப்பதற்கான கடற்படையின் நடவடிக்கையில் இந்த நிகழ்வு ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது.
லட்சத்தீவின் தென்கோடியில் உள்ள மினிக்காய் தீவு முக்கிய கடல் எல்லைகளை கொண்டுள்ளது. தேவையான உள்கட்டமைப்பு மற்றும் ஆதாரங்களுடன் கூடிய சுதந்திரமான கடற்படைப் பிரிவை உருவாக்குவது இந்த தீவுகளில் இந்திய கடற்படையின் ஒட்டுமொத்த செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும்.
மேற்கு அரேபிய கடலில் கடற்கொள்ளை எதிர்ப்பு மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்திய கடற்படையின் செயல்பாட்டு முயற்சிகளுக்கு இந்த தளம் உதவும்.
கவரட்டியில் உள்ள ஐஎன்எஸ் துவீப்ரக்ஷக்கிற்குப் பிறகு லட்சத்தீவில் அமைக்கப்படும் இரண்டாவது கடற்படை தளம் ஐ.என்.எஸ் ஜடாயு ஆகும்.
***
ANU/AD/PLM/DL
(रिलीज़ आईडी: 2010921)
आगंतुक पटल : 205