பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2024 மார்ச் 4 முதல் 5 வரை பஞ்சாயத்துகளை வலுப்படுத்துதல் சட்டம் குறித்த இரண்டு நாள் பிராந்திய மாநாட்டை செயலாளர் திரு விவேக் பரத்வாஜ் தொடங்கி வைக்கிறார்
Posted On:
02 MAR 2024 10:11AM by PIB Chennai
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2024 மார்ச் 4 முதல் 5 வரை பஞ்சாயத்துகளை வலுப்படுத்துதல் (பட்டியல் பகுதிகளுக்கு விரிவாக்கம்) சட்டம் குறித்த இரண்டு நாள் மண்டல மாநாட்டை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ் தொடங்கி வைக்கிறார்.
மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், ஜார்க்கண்ட் அரசின் பஞ்சாயத்து ராஜ் துறையுடன் இணைந்து இந்த மண்டல மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம், தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மாநில பஞ்சாயத்து ராஜ் துறைகளின் மூத்த அதிகாரிகள், பங்கேற்கும் மாநிலங்களைச் சேர்ந்த பஞ்சாயத்துகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.
பஞ்சாயத்துகள் (பட்டியலிடப்பட்ட பகுதிகளுக்கு விரிவாக்கம்) சட்டம், 1996 விதிகளின் உண்மையான உணர்வுக்கு ஏற்ப, இந்த சட்டத்தின் பலன்கள் அதன் இலக்கு பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்ய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது.
இந்த சட்டம் திறம்பட ஏற்றுக்கொள்வதையும் செயல்படுத்துவதையும் ஊக்குவிப்பதற்காக பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த மாநாடு இரண்டாவது முறையாக நடைபெறுகிறது.
ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பஞ்சாயத்து ராஜ், பழங்குடியினர் மேம்பாடு, வனம், வருவாய் மற்றும் கலால் துறை ஆகிய துறைகளின் பங்கேற்புடன், நடைபெறும் மண்டல மாநாடு, பெசா சட்டத்தை அமல்படுத்துவதில் மாநிலங்களின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்வதையும், அடிமட்ட அளவில் அதன் தாக்கம் குறித்த பகிரப்பட்ட கண்ணோட்டத்தை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அரசு அமைப்புகளுக்கு மேலதிகமாக, பட்டியல் பழங்குடியினருக்கு அதிகாரமளித்தலுக்காக செயல்படும் பல சமூக அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள் சொற்பொழிவில் பங்களிக்க அழைக்கப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டில் பெசா சட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கிராம சபைகளின் செயல்திறன் மற்றும் இந்த பகுதிகளில் வாழ்க்கையை எளிதாக்குவதில் அவற்றின் பங்கு, வளங்கள் (சிறு வன உற்பத்தி, சிறு கனிமங்கள், நிலச்சட்டங்கள், கடன் வழங்கும் சட்டங்கள் மற்றும் பெசா சட்டத்தை அமலாக்கும் பகுதிகளில் கலால் தொடர்பான விதிகளை அமல்படுத்துதல்) குறித்த பெசா பகுதிக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்கள் குறித்த விவாதம், சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்துவதில் அரசு சாரா பங்கெடுப்பாளர்களின் பங்கு, வன உரிமைகள் சட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், பங்கெடுப்பாளர்களிடையே இந்த சட்டத்தை அமல்படுத்துவதுடன் தொடர்புடைய அம்சங்கள் குறித்து அர்த்தமுள்ள விவாதங்களை மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
2024 ஜனவரி 11 முதல் 12 வரை மகாராஷ்டிராவின் புனேவில் நடைபெற்ற முதல் இரண்டு நாள் பிராந்திய மாநாட்டில், குஜராத், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய ஐந்து மாநிலங்களிலிருந்து தீவிரமாக பங்கேற்றது.
பெசா சட்டத்தை அமல்படுத்துவதில் மாநிலங்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை மதிப்பிடுவதும், அடிமட்ட அளவில் அதன் தாக்கம் குறித்த பொதுவான பார்வையை உருவாக்குவதும் பெசா மண்டல மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். பட்டியலிடப்பட்ட பகுதிகளில் உள்ள பழங்குடியின சமூகங்களின் நீடித்த வளர்ச்சிக்கான பெசா சட்டத்தை அமல்படுத்துவதை விரிவுபடுத்துவதில் பங்கேற்கும் மாநிலங்களிடையே ஒத்துழைப்பு மற்றும் விவாதங்களை ஊக்குவிப்பதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
***
ANU/AD/BS/DL
(Release ID: 2010850)
Visitor Counter : 111