குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

மகாராஷ்டிராவின் நாசிக்கில் கிராமப்புற கைவினைஞர்களுக்கு, பயிற்சி, உயர்தர இயந்திரங்கள் மற்றும் கருவித்தொகுப்புகளை கேவிஐசி வழங்குகிறது

Posted On: 01 MAR 2024 4:05PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையின்படி, 2047-ம் ஆண்டு வாக்கில் 'வளர்ந்த மற்றும் தற்சார்பு இந்தியாவைஉருவாக்கும் இலக்கை அடைவதற்காக, மத்திய அரசின் குறுசிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் கேவிஐசி நவீன பயிற்சிக்குப் பிறகு மகாராஷ்டிராவின் கைவினைஞர்களுக்கு உயர்தர கருவிப் பெட்டிகளை வழங்கியது.

நாசிக் மாவட்டம் சாத்பூரில் உள்ள திரிம்பக் சாலையில் அமைந்துள்ள ஜனநாயக மாநாட்டு மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில்கேவிஐசியின் தலைவர் திரு மனோஜ் குமார் 240 கைவினைஞர்களுக்கு 449 இயந்திரங்கள் மற்றும் கருவிப்பெட்டிகளை வழங்கியதுடன், கிராமத் தொழில்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 250 பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.  முதல் முறையாக, 20 பெண்களுக்கு பயிற்சிக்குப் பிறகு எலக்ட்ரீஷியன் டூல்கிட் வழங்கப்பட்டது இதன் சிறப்பு அம்சமாகும். இந்தப் பெண்கள் அனைவரும் ஸ்ரீராம்பூர்அகமது நகரில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.

விநியோக நிகழ்ச்சியில், 120 மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மின்சார சக்கரங்களும், 50 கைவினைஞர்களுக்கு எண்ணெய் இயந்திரமும், 20 பெண்களுக்கு மின்சார கருவிப்பெட்டியும், 20 கைவினைஞர்களுக்கு 4 காகித தட்டு மற்றும் டோனா தயாரிக்கும் இயந்திரங்களும், 30 தேனீ வளர்ப்போருக்கு 300 தேனீ  வளர்ப்புப் பெட்டிகளும் வழங்கப்பட்டன. பயனாளிகளிடையே உரையாற்றிய கேவிஐசியின் தலைவர் திரு மனோஜ் குமார்பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ்காதி கைவினைஞர்களுக்காக காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்த விநியோகத் திட்ட நிகழ்ச்சியில், காதி நிறுவனங்களின் பிரதிநிதிகள்காதி தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்கள்கிராமத் தொழில்கள் மேம்பாட்டுத் திட்டப் பயனாளிகள்வங்கிகளின் பிரதிநிதிகள்கேவிஐசிகேவிஐபி மற்றும் மகாராஷ்டிரா அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

* * *

(Release ID: 2010607)

PKV/RS/KRS(Release ID: 2010689) Visitor Counter : 72