வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
சங்கோலா மாதுளையை இந்தியாவில் இருந்து முதல் முறையாக கடல் வழியாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய, பதப்படுத்தப்பட்ட வேளாண் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்தது
Posted On:
01 MAR 2024 2:18PM by PIB Chennai
சங்கோலா மாதுளையை இந்தியாவில் இருந்து முதல் முறையாக கடல் வழியாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய, பதப்படுத்தப்பட்ட வேளாண் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்தது. 28 பிப்ரவரி, 2024 அன்று, ஐஎன்ஐ ஃபார்ம்ஸ் என்ற பழங்கள் ஏற்றுமதி நிறுவனம் பதப்படுத்தப்பட்ட வேளாண் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (ஏபிஇடிஏ) உதவியுடன் மும்பையிலிருந்து இந்த பழங்களை சோதனை அடிப்படையில் முதல்முறையாக கடல்வழியாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தது. மகாராஷ்டிராவின் சங்கோலா பகுதியில் விளைவிக்கப்படும் மாதுளைக்கு வரவேற்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால், ஏபிஇடிஏ தலைவர் திரு. அபிஷேக் தேவ் ஆகியோர் 4200 பெட்டிகள் (12.6 டன்) அடங்கிய மாதுளையை கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.
உலகின் மிகப்பெரிய மாதுளை உற்பத்தி நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இப்போது உலகின் முன்னணி மாதுளை ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக மாறுவதை நோக்கமாகக் கொண்டு இந்தியா செயல்படுகிறது.
மாதுளை இந்தியாவின் ஒரு முக்கியமான வேளாண் உற்பத்தி பழமாகும். இந்தியாவில், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திரா ஆகியவை மாதுளை அதிகம் உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்களாகும். மகாராஷ்டிரா இதன் உற்பத்தி பங்களிப்பில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக பங்களிக்கிறது.
ஐக்கிய அரபு அமீரகம், பங்களாதேஷ், நேபாளம், நெதர்லாந்து, சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, பஹ்ரைன் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கு 2022-23 ஆம் ஆண்டில் 58.36 மில்லியன் டாலர் மதிப்புள்ள மாதுளையை ஏற்றுமதி செய்ய ஏபிஇடிஏ வசதி செய்து கொடுத்துள்ளது.
***
PLM/AG/KV
(Release ID: 2010647)
Visitor Counter : 120