நிலக்கரி அமைச்சகம்

நிலக்கரி சுரங்கங்கள் பொருளாதார வளர்ச்சிக்கும், நிலக்கரி உற்பத்தி செய்யும் மாநிலங்களின் உள்கட்டமைப்பு மற்றும் சமூக மேம்பாட்டுக்கு ஊக்கம் அளித்துள்ளது

Posted On: 01 MAR 2024 2:38PM by PIB Chennai

நாட்டில் நிலக்கரி உற்பத்தி செய்யும் மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு நிலக்கரி சுரங்கத் துறை பெரும் ஊக்கமளிப்பதாக  அமைந்துள்ளது. மாநில அரசுகள் நிலக்கரியின் விற்பனை விலை ராயல்டியில் 14 சதவீதமும், டிஎம்எஃப் ராயல்டியில் 30 சதவீதமும், என்எம்இடி-யில் 2 சதவீதமும், நிலக்கரி நிறுவனங்களிடமிருந்தும் தனியார் துறையால் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியிலிருந்தும் பெற உரிமை உண்டு.

தனியார் / வணிக சுரங்கங்களைப் பொறுத்த வரையில், வெளிப்படையான ஏல முறையில் ஏலதாரர் அளிக்க முன்வரும் வருவாய் பங்கைப் பெற மாநில அரசுக்கு உரிமை உண்டு. இது தவிர, அதிகரித்த வேலைவாய்ப்பு, ரயில்வே, சாலைகள் போன்ற உள்கட்டமைப்பில் கூடுதல் முதலீடு மற்றும் பல பொருளாதார நன்மைகள் மூலம் மாநில அரசுகள் பயனடைகின்றன.

2014-2023 ஆம் ஆண்டில், நிலக்கரி சுரங்கத் துறை மூலம் நிலக்கரி உற்பத்தி செய்யும் அனைத்து மாநிலங்களின் ராயல்டி, டிஎம்எஃப் மற்றும் என்எம்இடி ஆகியவற்றின் மொத்த வருவாய் ரூ.152696 கோடியாகும். ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் வருவாயில் நிலக்கரி சுரங்கத் துறை மிகவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது என்பதை கடந்த 5 ஆண்டுகளில் மாநில வாரியான ஆண்டு வாரியான தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

2014-2023 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நிலக்கரி சுரங்கங்கள் மூலம் கிடைத்த வருவாயில் மொத்த ஆண்டு வளர்ச்சி விகிதம் (CAGR) 13.80 சதவீதம் என்ற அளவில் இருந்தது.

***

PLM/AG/KV

 



(Release ID: 2010638) Visitor Counter : 59


Read this release in: Kannada , English , Urdu , Hindi