எரிசக்தி அமைச்சகம்

எரிசக்தி திறன் அமைப்பின் (பிஇஇ), 22-வது நிறுவன தினம் இன்று கொண்டாடப்பட்டது; பிஇஇ-ன் செயல்பாடுகளுக்கு மத்திய மின்துறை அமைச்சர் திரு ஆர் கே சிங் பாராட்டு

Posted On: 01 MAR 2024 2:14PM by PIB Chennai

எரிசக்தி சேமிப்பு சட்டம்-2001-ன் விதிகளின் கீழ், மத்திய அரசின் எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் 22 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (மார்ச் 1) எரிசக்தி திறன்  அமைப்பின் (பிஇஇ) என்ற அமைப்பு நிறுவப்பட்டது.  இதன் 22-வது நிறுவன தினம் இன்று (மார்ச் 1, 2024) புதுதில்லியில் கொண்டாடப்பட்டது.

"இந்தியாவில் மின்மயமாக்கல் மற்றும் கார்பன் நீக்கத்தின் மூலம் எரிசக்தி மாற்றத்தை ஏற்படுத்துதல்" என்ற மையக்கருப்பொருளுடன் பிஇஇ-ன் 22-வது நிறுவன தினம்  கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்றுப் பேசிய மத்திய மின்துறை அமைச்சர் திரு ஆர்.கே. சிங், பிஇஇ அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறி வருவதாக கூறினார். இந்த அமைப்பு  எதிர்பார்த்ததை சிறப்பாக செயல்படுகிறது என்று அவர் தெரிவித்தார். பிஇஇ-ன் முயற்சிகளின் விளைவாக இந்தியாவின் எரிசக்தி நுகர்வு சுமார் 3.5% குறைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இது இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு மிகப்பெரிய விஷயம் என்று அவர் கூறினார்.

இந்த அமைப்பின் முயற்சிகளின் விளைவாக ஆண்டுக்கு 306 மில்லியன் டன்களுக்கும் அதிகமான கரியமில வாயு வெளியேற்றம் குறைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க வேண்டும் என்ற தேசிய வளர்ச்சி மைய இலக்கை 11 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தியா அடைய முடிந்ததற்கு பிஇஇ அமைப்பும் முக்கிய காரணமாகும்  என்று அமைச்சர் திரு ஆர் கே சிங் தெரிவித்தார்.

***

PLM/AG/KV



(Release ID: 2010594) Visitor Counter : 48


Read this release in: English , Urdu , Hindi