தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

மத்திய அரசின் ஆய்வு அமைப்பான சி-டாட், தற்சார்பு இந்தியாவை வலுப்படுத்தும் நோக்கில் குவால்காம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது

Posted On: 01 MAR 2024 11:17AM by PIB Chennai

ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ்  2024 எனப்படும் உலக கைபேசி உற்பத்தியாளர் சங்க மாநாடு அண்மையில் நிறைவடைந்தது. இந்த மாநாட்டின் போது மத்திய அரசின் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப பொது நிதியுதவி ஆராய்ச்சிக்கான டெலிமாடிக்ஸ் மேம்பாட்டு மையமான சி.டாட் (C-DOT), குவால்காம் டெக்னாலஜிஸ்  நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்தியாவில் புதுமைகளை ஊக்குவிக்கும் வகையில் உத்திசார் ஒத்துழைப்புகளை ஏற்படுத்தவும், புதுமையான தயாரிப்புகள் மற்றும் பயன்பாட்டு அம்சங்களில் இந்தியாவை மையமாகக் கொண்ட புத்தொழில் நிறுவனங்களை ஆதரிக்கவும் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

குவால்காம் டெக்னாலஜிஸ் நிறுவனம், அதன்  நிபுணத்துவம், சிறந்த நடைமுறைகள், அதிநவீன தொழில்நுட்பம், அறிவுசார் சொத்துரிமை பயிற்சி, கருவிகள் போன்றவற்றின் மூலம் சி-டாட்-க்கு ஆதரவை வழங்கும். இந்தியாவில் உள்நாட்டு தொலைத் தொடர்பு தயாரிப்புகளின்  வளர்ச்சி மற்றும் வணிகமயமாக்கலை விரைவாகக் கண்காணிப்பதற்காக சி-டாட்-க்கு இந்த ஆதரவு வழங்கப்படும்.

***

PLM/AG/KV

 



(Release ID: 2010579) Visitor Counter : 50


Read this release in: English , Urdu , Hindi , Telugu