வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் விரைவு சக்தி பெருந்திட்டத்தின் கீழ் கட்டமைப்புத் திட்டமிடல் குழுவின் 66-வது கூட்டம் ஐந்து உள்கட்டமைப்பு திட்டங்களை மதிப்பீடு செய்தது

प्रविष्टि तिथि: 01 MAR 2024 11:26AM by PIB Chennai

கட்டமைப்பு திட்டமிடல் குழுவின் (NPG) 66-வது கூட்டம் 27 பிப்ரவரி, 2024 அன்று புதுதில்லியில், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (DPIIT) கூடுதல் செயலாளர் திரு ராஜீவ் சிங் தாக்கூர் தலைமையில் நடைபெற்றது. இதில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின், மூன்று திட்டங்கள் மற்றும் ரயில்வே அமைச்சகத்தின், இரண்டு திட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட்டது.

ஆந்திரப் பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலை 216 எச்-ஐ மேம்படுத்துவது, மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரத்தைச் சுற்றி புறவழிச்சாலை அமைப்பது, அசாமின் குவஹாத்தி நகரைச் சுற்றி சுமார் 64 கிலோ மீட்டர் நீளமுள்ள வளையச் சாலை அமைப்பது தொடர்பாக கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மகாராஷ்டிரா மற்றும் மத்தியப்பிரதேசம் இடையே புதிய அகல ரயில் பாதை அமைப்பது மற்றும் உத்தரப்பிரதேசத்தில் அலகாபாத், பிரதாப்கர் மற்றும் ரேபரேலி மாவட்டங்களில் 72.27 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் கட்டமைப்பு இணைப்பை மேம்படுத்துதல் தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

***

PLM/AG/KV


(रिलीज़ आईडी: 2010576) आगंतुक पटल : 139
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी