சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

போதை மருந்து உபயோகத்தைத் தடுப்பதற்கான தேசிய செயல் திட்டம் மற்றும் போதைப் பொருள் இல்லா இந்தியா இயக்கத்தின் முன்னேற்றம்

Posted On: 29 FEB 2024 2:34PM by PIB Chennai

நாட்டில் போதைப் பொருள் உபயோகத்தைத் தடுப்பதற்காக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. போதைப் பொருள் தடுப்பிற்கான தேசிய செயல் திட்டத்தை அது அமல்படுத்தி வருகிறது. மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள் ஆகியவற்றுக்கு போதைப் பொருளின் தீமைகள் குறித்த  விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், போதைப் பொருள் உபயோகத் தடுப்பு நடவடிக்கைகளுக்கான திறன் மேம்பாடு, நிகழ்ச்சிகளுக்கு இந்த அமைச்சகம் நிதியுதவி அளித்து வருகிறது.  போதைப்                                                                                 பொருள் மறுவாழ்வு மையம் நடத்தி வரும் அரசு சாரா தொண்டு நிறுவனம், தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகியவற்றுக்கும் அரசு மருத்துவமனைகளில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை வசதிகளுக்காகவும் நிதியுதவி அளிக்கிறது.

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், சிகிச்சைக்கு பிந்தைய ஆலோசனைகளுக்காகவும் 342 ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையங்கள் போதைப் பொருள் தடுப்புக்கான செயல் திட்டத்தின் கீழ்  நடத்தப்பட்டு வருகிறது.

போதைப் பொருள் தீமை குறித்தும், வாழ்க்கைத் திறன் குறித்தும் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான 47 சமூகத் திட்டங்களும் செயல்பட்டு வருகிறது.

 

********

PKV/IR/AG/KRS



(Release ID: 2010148) Visitor Counter : 80


Read this release in: English , Urdu , Hindi