பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்புத் துறை செயலாளர் திரு கிரிதர் அரமனே ஜெர்மன் பாதுகாப்புத் தொழில்துறையினருடன் கலந்துரையாடினார்
प्रविष्टि तिथि:
28 FEB 2024 6:11PM by PIB Chennai
பாதுகாப்புத் துறை செயலாளர் திரு கிரிதர் அரமனே இன்று (2024 பிப்ரவரி 28) பெர்லினில் ஜெர்மன் பாதுகாப்பு தொழில்துறை சங்கத்தினருடன் (BDSV) கலந்துரையாடினார். அந்த சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய அவர், இந்தியாவில் பாதுகாப்புத்துறை உற்பத்தியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களை எடுத்துரைத்தார். இந்த சீர்த்திருத்தகங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதை எளிதாக்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த கூட்டத்தில் ஜெர்மனிக்கான இந்தியத் தூதர் திரு பி ஹரிஷ் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பாதுகாப்பு நிறுவனத்தினர் பங்கேற்றனர். இந்தியாவில் வணிக மற்றும் முதலீட்டு சாத்தியக்கூறுகள் குறித்த விவாதமும் நடைபெற்றது..
***
ANU/PKV/PLM/RS/DL
(रिलीज़ आईडी: 2009899)
आगंतुक पटल : 104